“கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்காவில் சஃபாரி சென்று கொண்டிருந்த இருந்த பேருந்தின் ஜன்னல் மீது எதிர்பாராதவிதமாக சிறுத்தை பாய்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேருந்து ஜன்னலில் சிறுத்தை தலையை விட்டு பார்க்கிறது.
இதனைப் பார்த்த அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டு அலறத் தொடங்கினர். கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே கடந்த ஜூன் மாதம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் சிறுத்தை சஃபாரியை தொடங்கி வைத்தார்.
இதனால் உயிரியல் பூங்காவிற்கு வரும் மக்கள் வனவிலங்குகளை மிக அருகில் பார்த்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
Come, let’s meet face-to-face. 🐆
A leopard at Bannerghatta National Park recently jumped onto the window of a jungle safari bus, creating a moment of both awe and fear for the passengers inside. The wild cat’s sudden appearance startled everyone, as it leaped onto the bus… pic.twitter.com/YqDI265CS2— Karnataka Portfolio (@karnatakaportf) October 6, 2024