அக்டோபர் 7 தாக்குதல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் இதே நாளில் [அக்டோபர் 7] முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. ஆண்டுக்குள் தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர்.
இதனால் கோபமுற்ற இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கவும் ஹமாஸை அழித்தொழிக்கவும் பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்த சுமார் 23 லட்சம் மக்களில் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துவிட்ட நிலையில், அப்பகுதிகள் அனைத்தும் கைவிடப்பட்ட பகுதிகளாக காட்சியளிக்கின்றன. வாகனங்கள் பாய்ந்தோடிய தெற்கு மற்றும் வடக்கு காசாவை இணைக்கும் நெடுஞ்சாலை, இருந்த இடம் தெரியாமல் அழிவுக்கு உள்ளாகி உள்ளது.
தீவிரமான போர் தொடங்கி 1 வருடம் ஆகிய நிலையிலும், அமைதி எட்டப்படாமல் அண்டை நாடான லெபனானுக்கும் போர் விரிவடைந்துள்ளது.ஒரு வருடம் பாலஸ்தீனதுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ஈரானும் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியது. இதற்கிடையே அக்டோபர் 7 தாக்குதலை நடத்திய ஹமாஸ், அதே நாளையொட்டி இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றை இடைமறித்து அழித்ததாகவும், மற்றவை திறந்த வெளியில் விழுந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் நேற்றைய தினம் இஸ்ரேலிய நகரமான பீர்ஷெபா [Beersheba] மத்திய பஸ் நிலையத்தில் உள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் நுழைந்த அஹமத் என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் எல்லை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அஹமத் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
உலகம் இதற்கிடையே இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி நேற்றைய தினம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி பேரணி நடத்தினர். மத்திய லண்டனில் சுமார் 40,000 பேர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தினர். பாரிஸ், ரோம், மணிலா, கேப் டவுன், நியூயார்க் என பலேவறு நாடுகளிலும் பெரிய அளவிலான பேரணிகள் நடத்தப்பட்டன. வாஷிங்டன் நகரில் அமைத்துள்ள வெள்ளை மாளிகை அருகிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.