லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல் காரணமாக இலங்கையை சேர்ந்த 100க்கும் அதிகமான அமைதிப்படைவீரர்கள் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
தென்லெபனானின் நக்குராவில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்கால படையின் மத்திய கட்டளை பீடத்தை இலக்குவைத்து இஸ்ரேலிய படையினர் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தரைத்தாக்தால் வான்தாக்குதலில் இலங்கையை சேர்ந்த இரண்டு அமைதிப்படையினர் காயமடைந்தனர்.
இதேவேளை ஐக்கியநாடுகள் அமைதிப்படையினர் குறிப்பிட்ட எல்லைபகுதியிலிருந்து வெளியேறவேண்டும் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து குழப்பநிலை உருவாகியுள்ளது.
அமைதிப்படையினர் அந்த தளத்திலிருந்து வெளியேறவேண்டு;ம் என இஸ்ரேலிய படையினர் வேண்டுகோள் விடு;த்துள்ளனர்.அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படையினரை நோக்கி ஹெஸ்;புல்லாக்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் ஐக்கியநாடுகளின் அமைதிப்படையினரை வெளியேறச்சொல்லியுள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்கால படையின் பேச்சாளர் அன்ரே டெனென்டி இஸ்ரேலையும் லெபனானையும் பிரிக்கும் மூன்று கிலோமீற்றர் நீலகோட்டிலிருந்து தங்களை இஸ்ரேல் விலகசொல்லியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அமைதிப்படையினர் இதனை ஏற்க மறுத்துள்ளனர்.
ஐக்கியநாடுகளின் கொடியுடன் காணப்படும் அமைதிப்படையின் மத்திய கட்டளை பீடத்தில் 125 இலங்கை அமைதிப்படையினர் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
லெபானிற்கான ஐக்கிய நாடுகளின் இடைக்கால படையில் பல நாடுகளை சேர்ந்த சுமார் 9500ற்கும் மேற்பட்ட படையினர் பணியாற்றுகின்றனர்.
2006 இல் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் 33 நாட்கள் நீடித்த யுத்தத்தின்பின்னர் உருவான யுத்த நிறுத்த உடன்படிக்கையை கண்காணிப்பதே இவர்களின் பணி.
வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலிற்கு சர்வதேச அளவில் கண்டனம் வெளியாகியுள்ளது.ஐக்கியநாடுகள் அமைதிப்படையினரை தாக்குவதை இஸ்ரேல் கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஐக்கியநாடுகளின் கொடியின் கீழ் செயற்படும் தனது துணிச்சலான படைவீரர்களை பாராட்டியுள்ளதுடன்,இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ளது.
ஐக்கியநாடுகளின் பணியாளாகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான கடப்பாடு,ஐக்கியநாடுகளின் வளாகத்தின் மீறல்மீறாதன்மiயை எந்த தருணத்திலும் உறுதி செய்வது குறித்து இலங்கை உறுதியாக உள்ளது என வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு சில மணிநேரத்தின் பின்னர் இஸ்ரேல் ஐக்கிய நாடுகளின் அமைதிபடையினரை இலக்குவைத்தது, விமானதாக்குதலில் இரண்டு லெபனான் படையினர் கொல்லப்பட்டனர்.
காயமடைந்த இலங்கை அமைதிப்படையினர் ஐநாவின் தளத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என தெரிவித்துள்ள இராணுவபேச்சாளர் ஏனையவர்கள் தளத்திலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் இடைக்கால படையின் தளபதி உட்பட்டவர்கள் இலங்கை அமைதிப்படையினரை மருத்துவமனையில் சென்று பார்த்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த இலங்கை படையினர் எவரும் உயிராபத்தான நிலையில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய படையினர் ஐநாவின் தளத்தை இலக்குவைக்கவில்லை,விமானதாக்குதலின் சிதறல்களே தாக்கின,தரைதாக்குலும் ஆட்டிலறி தாக்குதலும் ஒரே நேரத்தில் இடம்பெற்றதால் அவர்களால் இரண்டையும் வித்தியாசப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ள இலங்கை இராணுவத்தின் பேச்சாளர் நகூரா கிராமத்தினை இலக்குவைத்தே விமானதாக்குதல் இடம்பெற்றது தளத்தை இலக்குவைத்து இல்லை என சந்தேகிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
இலங்கை அமைதிப்படையினர் பதுங்குழியில் இருந்தனர்,தாக்குதல் 150 மீற்றர் தொலைவில் இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.