அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் கலிபோர்னியாவை அடுத்த கோச்செல்லாவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அங்கு நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட டிரம்ப், வாக்காளர்களிடையே உரையாற்றினார்.

டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த கூட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டா ஏற்றப்பட்ட கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிரம்ப் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டதை ரிவர்சைடு கவுண்டி ஷெரிப் அலுவலகம் உறுதுப்படுத்தி இருக்கிறது.

துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு இருப்பதை அறிந்திருப்பதாகவும், சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் போது டிரம்ப், பேரணியில் கலந்து கொண்ட யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\

“கைது செய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்படவில்லை என்ற போதிலும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்று எஃப்.பி.ஐ. மற்றும் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply