கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 16-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 16-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 16-ம் தேதி புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரலவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கன மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, இந்த மாவட்டங்களுக்கு அக்டோபர் 15-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 16-ம் தேதி புதன்கிழமை கன மழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. சென்னையில், புளியந்தோப்பு, மணலி, வியாசர்பாடி, ஓ.எம்.ஆர் சாலை, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

அக்டோபர் 16-ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெயர் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 16-ம் தேதி புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல, கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply