சேமியா ரவா அல்வா ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம்.

யம்மியான சேமியா ரவா அல்வா ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம்.

தேவையானவை

ரவை – 1 கப்
சேமியா – அரை கப்
சர்க்கரை – இரண்டரை கப்
நெய் – அரை கப்
முந்திரி – 10
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர் பொடி – ஒரு சிட்டிகை
பால்கோவா – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ரவை, சேமியாவை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தாக அதே கடாயில் மீண்டும் கொஞ்சம் நெய் சேர்த்து முந்திரியை போட்டு நிறம் மாறாமல் வறுத்து, ஏற்கனவே வறுத்து வைத்துள்ள சேமியா, ரவையை சேர்க்க வேண்டும்.

அடுத்தாக 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கலர் பொடி சேர்த்து சர்க்கரை சேர்த்து கலக்கவும். சர்க்கரை கரைந்து எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும்போது இறக்கி ஏலக்காய்த்தூள், பால்கோவா கலந்து விடவும். அவ்வளவு தான் தித்திப்பான சேமியா அல்வா ரெடி.

 

Share.
Leave A Reply