ஒரு விஷயம் சரியாக இல்லையென்றால் விமர்சிக்கிறோம்; புகார் சொல்கிறோம். அது திருத்திக் கொள்ளப்படும் போது பாராட்டுவதும் நம்முடைய கடமைதான். ஆமாம்தானே? ஞாயிற்றுக்கிழமை எபிசோடை விஜய் சேதுபதி கையாண்ட விதம் பாராட்டத்தக்கதாக இருந்தது.

விஜய் சேதுபதி

எந்தவொரு தலைப்பையும் அதிகமாக இழுக்காமல் பரபரவென நகர்த்திச் சென்றார். கடிந்து கொள்ளுதலின் சதவிகிதம் குறைவாக இருந்தது.

முகத்தின் கடுமையை சற்றுக் குறைத்துக்கொண்டு இனிமையையும் இணக்கத்தையும் கொஞ்சம் கூட்டிக் கொண்டால் நிறைவாகி விடும்.

நிகழ்ச்சியைத் தொகுப்பவர் மட்டுமல்ல, போட்டியாளர்களும் சரியாக இணைந்தால்தான் அந்த நிகழ்ச்சி சுவாரசியாகும்.

ஆமாம்தானே? அந்த வகையில் ‘எவ்வளவு பத்த வைத்தாலும் வெடிக்காத நமத்துப் போன பட்டாசா இருந்தா.. என்னதான் பண்றது. என்னம்மா.. இப்படிப் பண்றீங்களேம்மா?” என்று விசே சலித்துக் கொள்வதில் நியாயம் இருக்கிறது. அந்த அளவிற்கு பெரும்பாலான போட்டியாளர்கள் பம்மி, விழித்து, தயங்கி, புரியாதது போல் பாவனை செய்து சொதப்புகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 21

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S8 27-10-2024 Vijay Tv Show – நாள் 21

 

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்; Bigg Boss Tamil S8 26-10-2024 Vijay Tv Show- நாள் 20

Share.
Leave A Reply