ஹட்டன் நகரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய யுவதிகள் நால்வரை கைது செய்து விசாரணைகள் செய்தபோது, அவர்கள் பொதுமக்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகள் போன்வற்றை திருடியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஹட்டன் நகரை சூழவுள்ள பகுதிகளில் இருந்து ஹட்டன் நகருக்கு பொருட்களை வாங்கச் செல்பவர்களிடமிருந்து இந்த யுவதிகள் பணம் மற்றும் பொருட்கள் பலவற்றை திருடியுள்ளனர்.

ஹட்டன் நகரில் ஒருவரின் கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலியை பறிக்க முற்படுவதாக சந்தேகித்து சிவில் உடையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை கைது செய்து விசாரித்துள்ளார்.

அந்த விசாரணைகளின்போது நான்கு யுவதிகள் இத்திருட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் தெரிய வந்ததையடுத்து, அந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நான்கு யுவதிகளிடமிருந்து 2 இலட்சத்து 55ஆயிரம் ரூபாய் பணமும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் 21 – 26 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இவர்கள் வென்னப்புவ மற்றும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல இடங்களிலும் திருடிவந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply