இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி வந்த விரைவு விசா நடைமுறையை கனடா அரசு, சனிக்கிழமையுடன் (9) நிறுத்தியுள்ளது.

இதன்படி அடுத்த ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பு உட்பட அனைத்து படிப்புகளிலும் சேர வெளிநாட்டு மாணவர்கள் 4 இலட்சத்து 37 ஆயிரம் பேருக்கு மட்டுமே விசா வழங்க உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழி தகுதி தேர்வு நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. சர்வதேச மாணவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் வேலை பார்ப்பதற்கு வழங்கப்படும் அனுமதியும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அங்கு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

கனடாவில் நிலைமை சரியில்லாததால், அங்கு படிக்க இந்திய மாணவர்கள் செல்ல வேண்டாம் என மத்திய அரசும் அண்மையில் அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply