இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம் இலங்கையின் 3 ஆவது பலமிக்க அரசியல் கட்சி என்ற இடத்தி இலங்கை தமிழரசுக்கட்சி பிடித்துள்ளது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமையிலான தேசிய மக்கள் சக்தி 68,63,186 வாக்குகளை பெற்று 141 நேரடி ஆசனங்கள் 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் என 159 ஆசனங்களைக் கைப்பேரறி மூன்றி இரண்டு பெரும்பான்மை பலத்தை நிலைநாட்டியுள்ளது

அதற்கு அடுத்தாக ஐக்கிய மக்கள் சக்தி 19,68,716 வாக்குகளை பெற்று 35 நேரடி ஆசனங்கள்,5 தேசியப்பட்டியல் ஆசனங்கள் என 40 ஆசனங்களைக் ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் எதிர்கட்சியாகயாகவும் உருவாகியுள்ளது.

மூன்றாம் இடத்தில் இலங்கை தமிழரசு கட்சி 2,57,813 வாக்குகளை பெற்று மட்டக்களப்பில் 3 ஆசனங்களையும், அம்பாறையில் 1 ஆசனத்தையும், திருகோணமலையில் 1 ஆசனத்தையும், வன்னியில் 1 ஆசனத்தையும், யாழ்ப்பாணத்தில் 1 ஆசனத்தையும் என 7 நேரடி ஆசனங்கள் .இ தேசியப்பட்டியல் ஆசனம் என 8 ஆசனங்களைக்கைப்பற்றி 3 ஆவது பலமிக்க அரசியல் கட்சியாக உருவாகியுள்ளது.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணி 5 ஆசனங்களையும் கடந்தமுறை 145 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி புரிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெர முன 3 ஆசனங்களையும் முஸ்லிமும் காங்கிரஸ் 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 1 ஆசனத்தையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் சுயேச்சை குழு 17 ஒரு ஆசனத்தையும் இலங்கைத் தொழிலாளர் கட்சி 1 ஆசனத்தையும் சர்வஜன அதிகாரம் கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன .

Share.
Leave A Reply