“சவுந்தர்யா ரொம்ப கிளவரா கேம் ஆடறா.. அவளைப் பார்த்துதான் நான் ரொம்ப பயப்படறேன். எந்தப் பக்கம் இருக்கான்னே தெரியல” என்று முத்து சொல்லிக் கொண்டிருக்க “எல்லாமே பிளான் பண்ணி பண்றா’ என்று இதை ஆமோதித்துக் கொண்டிருந்தார் தர்ஷிகா.
இந்த எபிசோடை விஜய்சேதுபதி இன்முகத்துடன் கூலாக கையாண்டார். யாரையும் அநாவசியமாக கடிந்து கொள்ளவில்லை. என்றாலும் நிகழ்ச்சியில் அதிக சுவாரசியமில்லை. உப்புச் சப்பற்ற வெற்ற விசாரணையாக இருந்தது.
சீக்ரெட் டாஸ்க் என்று தெரிந்த பிறகுதான் ராணவ்வை பலரும் பாராட்டினார்கள். எனில் ‘சிறந்த போட்டியாளர்’ தேர்வு ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த ரகசியத்தை பிக் பாஸ் உடைத்திருக்க வேண்டும்.
வர்ஷினி கேரக்டராகவே மாறி விட்டார் போல. VP சார் மீது உண்மையாகவே அவருக்கு கிரஷ் ஏற்பட்டிருக்கிறதாம். (வெளியில் வந்தால் ‘அர்ச்சனை’
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 41