முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
- பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
- விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
- பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- கே.டி.லால்காந்த – விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு ,பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம் , ஊடகம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- வசந்த சமரசிங்க – வர்த்தக , வாணிப , உணவுப்பாதுகாப்பு , கூட்டுறவு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞானம் , தொழிநுட்பம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- குமார ஜெயக்கொடி – வலுசக்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
(R)