தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்த துயரச் சம்பவம் கனடாவில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

மகனைக் கனேடியப் காவற்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய குலத்துங்கம் மதிசூடி என்பவரே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டவராவார்.

தமிழினப் பற்றாளரும் கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி கடந்த 40 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.

அவ்வப்போது இலங்கைக்கு சென்று  பலவிதமான சமூக சேவைகளை வடக்கு, கிழக்கில் வழங்கி வந்தவர். வருடமொருமுறை காரைதீவு  செல்கின்றவர்.

அம்பாறை மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளைச் செய்தவர். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அவரது மகன் இளங்கோ காதல் முறிவு காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும்,  கடந்த வாரம் இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கின்றார் எனவும் அவரது சகோதரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

உடனடியாகக் கனடா காவற்துறையினர் அவரைக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். காவற்துறை விசாரணைகள் தொடர்கின்றன.

Share.
Leave A Reply