இண்டியன் பிறீமியர் லீக் வரலாற்றில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனை ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) ஏலத்தில் எடுத்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இன்று நிறைவுக்கு வந்த 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலத்தின்போது 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷியை ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா ஏல விலையில் ராஜஸ்தான் றோயல்ஸ் தனது அணியில் இணைத்துக்கொண்டுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஏலத்தில் விடப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

அவரது அடிப்படை விலை 30 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அந்த இளஞ் சிங்கத்தை எப்படியாவது ஏலத்தில் வாங்கி விட வேண்டும் என்ற பேரவாவுடன் ராஜஸ்தான் றோயல்ஸும் டெல்ஹி கெப்பிட்டல்ஸும் ஏலப் போட்டியில் இறங்கின. இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கு அந்த சிறுவனை தனதாக்கிக்கொண்டது.

இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது 12ஆவது வயதில் விளையாடிய இடதுகை துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யாவன்ஷி, மிக அண்மையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்தார்.

சென்னையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்  போட்டியில் 58 பந்துகளில் சதம் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

அவர் 62 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரன் அவுட் ஆனார்.

பிஹாரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான ரந்திர் வர்மா கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் முச்சதம் குவித்து அசத்தியிருந்தார்.

வைபவ் சூர்யாவன்ஷி, இடதுகை சுழல்பந்துவீச்சாளருமாவார்.

இரண்டாம்  நாள் அதிக விலைக்கு வாங்கப்பட்டார் புவ்ணேஷ்வர்

இரண்டாம் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமார் ஆவார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் கடந்த வருடம் 4.2 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமாரை இந்த வருட ஏலத்தில் 6 கோடி ரூபா அதிகமாக செலுத்தி 10.75 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியுள்ளது.

கடந்த வருடம் ஏலத்தில் விடப்படாமல் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய வீரர் ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க்கை இந்த வருடம் அதே அணி 9 கோடி ரூபாவுக்கு ஏல விலைக்கு தக்கவைத்துக்கொண்டது.

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷாரவை 1.6 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மற்றொரு இலங்கையரான ஏஷான் மாலிங்கவை ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இலங்கையின் சாதனை வீரர் கமிந்து மெண்டிஸை 75 இலட்சம் ரூபா அடிப்படை ஏல விலைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதே அடிப்படை விலைக்கு துஷ்மன்த சமீரவை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் இணைத்துக்கொண்டுள்ளன.

இங்கிலாந்தின் சகலதுறை வீரர் சாம் கரன், தென் ஆபிரிக்காவின் முன்னாள் அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஆகியோர் உட்பட இன்னும் சில முன்னணி வீரர்களின் ஏல விலைகள் கடந்த வருடத்தை விட சரிவடைந்திருந்தது.

வியாஸ்காந்த் விலைபோகவில்லை

இலங்கையின் யாழ். மைந்தன் சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த், இலங்கையின் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷன்க, நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், இந்தியாவின் மயான்க் அகர்வால், ப்ரித்வி ஷோ இரண்டாம் நாளன்று விலைபோகவில்லை.

 

 

நிறைவடைந்தது ஐ.பி.எல் மெகா ஏலம்!

சவுதி அரேபியாவில் இரண்டு நாள்களாக நடைபெற்றுவந்த ஐ.பி.எல் மெகா ஏலம் நிறைவடைந்தது.

ஏலத்தின் கடைசி வீரரை வாங்கிய பெங்களூரு!

விக்னேஷ் பதுரை மும்பை அணி ரூ. 30 லட்சத்துக்கு எடுக்க, ஏலத்தின் கடைசி வீரர் மோஹித் ரத்தீயை அடிப்படை விலை ரூ. 30 லட்சத்துக்கு பெங்களூரு வாங்கி, ஏலத்தை நிறைவு செய்து வைத்தது.

இறுதியில் அர்ஜுன் டெண்டுல்கரை எடுத்த மும்பை!

சில மணிநேரத்துக்கு முன்பு யாரும் ஏலம் எடுக்கப்படாத அர்ஜுன் டெண்டுல்கரை, மும்பை அணி அடிப்படை விலை ரூ. 30 லட்சத்துக்கு வாங்கியது. மேலும், இதே மும்பை தென்னாபிரிக்க பவுலர் லியாத் வில்லியம்சை ரூ. 75 லட்சத்துக்கு வாங்கியது.

குணால் சிங் ராத்தோர் மற்றும் அசோக் சர்மா ஆகியோரை தலா ரூ. 30 லட்சத்துக்கு ராஜஸ்தானும், குல்வந்த் கேஜ்ரோலியாவை ரூ. 30 லட்சத்துக்கு குஜராத்துக்கு வாங்கியது. அதையடுத்து, பெங்களூரு அணி லுங்கி இங்கிடியை ரூ. 1 கோடிக்கும், அபிநந்தன் சிங்கை ரூ. 30 லட்சத்துக்கும் வாங்கியது.

கடைசி நேரத்தில் அடிப்படைக்கு விலைக்கு ஏலம் போன இளம் வீரர்கள்!

திரிபூரண விஜயை அடிப்படை விலை ரூ. 30 லட்சத்துக்கு டெல்லி வாங்கியது. இதே டெல்லி, மாதவ் திவாரியை ரூ. 40 லட்சத்துக்கு வாங்கியது.

தென்னாபிரிக்க பவுலருக்கு போட்டியிட்ட பெங்களூரு, ராஜஸ்தான்!

கடைசி நேரத்தில் பலரும் ஏலம் போகாத நிலையில், தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் க்வெனா மகாபாவுக்கு பெங்களூருவும், ராஜஸ்தானும் மாறி மாறி கைதூக்கின. இறுதியில், ரூ. 1.50 கோடிக்கு ராஜஸ்தான் அவரை வாங்கியது, அவரைத்தொடர்ந்து,

பிரவீன் துபேவை ரூ. 30 லட்சத்துக்கு பஞ்சாப் அணி வாங்கியது. மேலும், அஜய் ஜாதவ் மண்டல் மற்றும் மன்வந்த் குமார் ஆகியோரை தலா ரூ. 30 லட்சத்துக்கு டெல்லி வாங்கியது. அதோடு, கரீம் ஜனத்தை ரூ. 75 லட்சத்துக்கு குஜராத்தும், பெவன் ஜேக்கப்ஸை ரூ. 30 லட்சத்துக்கு மும்பையும் வாங்கின.

சச்சினின் மகனைக் கைவிட்ட மும்பை!
கடந்த ஆண்டு மும்பையில் விளையாடிய, சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை அணி உட்பட எந்த அணியும் அடிப்படை விலைக்கு (ரூ. 30 லட்சம்) கூட எடுக்கவில்லை.

மறுபக்கம், வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கை ரூ. 74 லட்சத்துக்கு கொல்கத்தாவும், சச்சின் பேபியை ரூ. 30 லட்சத்துக்கு ஐதராபாத்தும், ஆண்ட்ரே சித்தார்த்தை ரூ. 30 லட்சத்துக்கு சென்னையும் வாங்கின.
மேலும், ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் மற்றும் அர்ஷின் குல்கர்னியை தலா ரூ. 30 லட்சத்துக்கும், மேத்யூ ப்ரீட்ஸ்கியை ரூ. 75 லட்சத்துக்கும் லக்னோ வாங்கியது.

23 வயது இளம் வீரரை பெங்களூருவுடன் போட்டி போட்டு வாங்கிய பஞ்சாப்!

ப்ரியன்ஷ் ஆர்யா எனும் இளம் ஆல்ரவுண்டரை பெங்களூரு அணியுடன் போட்டி போட்டு ரூ. 3.80 கோடிக்கு பஞ்சாப் வாங்கியது. அவரைத்தொடர்ந்து, ஜேக்கப் பெதல் என்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டரை ரூ. 2.60 கோடிக்கு பெங்களூரு வாங்கியது. அதேபோல், மற்றொரு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ப்ரைடன் கார்ஸை ரூ. 1 கோடிக்கும், இலங்கை ஆல்ரவுண்டர் கமிந்து மெண்டிஸை ரூ. 75 லட்சத்துக்கும் ஐதராபாத் வாங்கியது.

CSK-வில் மீண்டும் ஒரு சிங்!

26 வயது இளம் வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங் என்பவரை லக்னோ, குஜராத்துடன் போட்டிபோட்டு ரூ. 2.20 கோடிக்கு சென்னை வாங்கியது. அதேசமயம், சிகந்த ராசா, ஸ்டீவ் ஸ்மித், பிரெண்டன் கிங், பத்தும் நிசங்கா ஆகியோர் ஏலம் போகவில்லை. இவர்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் வீரர் ஃபசல்ஹக் ஃபரூக்கியை ரூ. 2 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியது.

Share.
Leave A Reply