சாய்ரா பானு குஜராத் மாநிலத்தின் குட்ச் நகரில் 1973ஆம் ஆண்டு டிசம்பரில் பிறந்தவர் ஆவார். சாய்ரா பானு உயர் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது குடும்பம் பெரும் கலாச்சார பாரம்பரிய பின்னணியை கொண்டதாகும். சாய்ரா பானுவும் அவரது சமூக பணி மற்றும் தொண்டுகளுக்காவும் அறியப்படுகிறார். குறிப்பாக, சமூக வளர்ச்சிக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வி ஆகிய லாபநோக்கமற்ற விஷயங்களுக்கு நன்கொடை வழங்குபவராகவும் அறியப்படுகிறார்.
சாய்ரா பானு மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஜோடிக்கு, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. ஏ.ஆர். ரஹ்மானின் தாயாரும், அவரது சகோதரியும்தான் சாய்ரா பானுவை சென்னையில் ஒரு வழிபாட்டு தலத்தில் முதன்முதலாக பார்த்ததாக ஏ.ஆர். ரஹ்மான் ஒரு நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.
“எனது தாயாருக்கு சாய்ராவையோ அல்லது அவரது குடும்பத்தாரையோ யாரென்று தெரியாது. ஆனால், அந்த வழிபாட்டு தலத்தில் இருந்து 5 வீடுகள் தள்ளிதான் சாய்ரா இருந்தார்.
எனவே அவரை பார்த்த உடன் அவரிடம் சென்று எனது தாயார் பேசி உள்ளார். அனைத்தும் இயல்பாகவே நடந்தது” என அந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.சாய்ராவின் பானுவின் 28ஆவது பிறந்தநாளில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் அவரை முதன்முதலில் சந்தித்ததாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். ‘அவர் மிகவும் அழகாக அமைதியாக இருந்தார்.
நாங்கள் 1995ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி அவரது 28ஆவது பிறந்தநாள் அன்றுதான் முதன்முதலில் சந்தித்தோம். அதற்கு பின் பெரும்பாலும் நாங்கள் தொலைப்பேசியில்தான் பேசிக்கொள்வோம்.
சாய்ரா குச்சி மொழி பேசுவார். ஆங்கிலத்திலும் பேசுவார். நான் அவரிடம் என்னை திருமணம் செய்துகொள்கிறாயா என ஆங்கிலத்தில் கேட்டேன்.
அவர் அப்போது மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் தற்போது அமைதியாக மட்டும் இருப்பதில்லை…’ என அதில் ஏ.ஆர். ரஹ்மான் வேடிக்கையாக தெரிவித்தார். இந்த ஜோடிக்கு கடந்த 1995ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
ஏ.ஆர். ரஹ்மானை விட சாய்ரா பானு 7 வயது இளையவர் ஆவார். இந்த ஜோடிக்கு கதிஜா, ரஹீமா, அமீன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.