“இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியவேண்டும், கார் ஓட்டும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று சட்டத்தை அமல்படுத்தினாலும் அதை பின்பற்றுவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க இரு சக்கரவாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமருபவர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிவது சட்டப்பூர்வமான தேவை மட்டுமல்ல, பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதும் கூட. இந்த நிலையில், திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட்டை மாற்றி சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர் மணமக்கள்.

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமணத்தில் மணமகன் பிரேந்திரன் மற்றும் மணமகள் ஜோதி சாஹு இருவரும் முதலில் மோதிரத்தை மாற்றிக்கொண்டனர்.

பின்னர் மாலைக்கு பதிலாக ஹெல்மெட்டை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து, விபத்தைத் தவிர்க்க ஹெல்மெட் அணியும் பழக்கத்தை கடைபிடிக்குமாறு பிரேந்திரன் தனது திருமண விழாவில் கலந்து கொண்ட இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து மணகன் பிரேந்திரன் சாஹு கூறுகையில், தனது தந்தை 2 ஆண்டுகளுக்கு முன் ஹெல்மெட் அணியாமல் இருசக்கரவாகனத்தில் பயணித்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதனால் என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பேரிழப்பு ஆழமாக என்னை பாதித்தது. இதனை தொடர்ந்து இருசக்கர வானம் ஓட்டுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இந்த விழிப்புணர்வை மேற்கொண்டேன் என்றார். “,

Share.
Leave A Reply