யாழில் ஆரம்பபாடசாலை ஒன்றில் கற்பிக்கும் இளம் குடும்பப் பெண்ணான ஆசிரியையின் தொலைப்பேசிக்கு வாட்ஸ் அப் (whatsapp) மூலம் ஆபாச தோற்றங்களுடன் கூடிய புகைப்படங்களை அனுப்பிய மாணவி ஒருவரின் தந்தையை கணவனும் அவரது உறவுகளும் நையப்புடைத்துள்ளனர்.

யாழ் புறநகர் பகுதியில் உள்ள ஆரம்பபாடசாலை ஒன்றில் கற்பிக்கும் திருமணமான ஆசிரியை தனது மாணவர்களுக்காக வட்சப் குறுாப் ஒன்றை செயற்படுத்தி வந்துள்ளார்.

அக் குறுப்பில் மாணவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான விடயங்களை பதிவிட்டு வந்துள்ளார்.

இந் நிலையில் குறித்த ஆசிரியையின் வட்சப் இலக்கத்திற்கு ‘Remo jude’ என்ற வட்சப் பெயருடன் பல தடவைகள் காதல் கவிதைகள் மற்றும் காதல் பாட்டுகள் அனுப்பப்பட்டு வந்துள்ளது.

தொடர்ச்சியாக குறித்த இலக்கத்திலிருந்து மெசேஜ் வரவே அந்த வட்சப் இலக்கத்தை தடை செய்த போது நேரடியாக அந்த இலக்கத்திலிருந்து மேசேஜ் வரத் தொடங்கியுள்ளது.

ஆசிரியை தடை செய்த வட்சப் இலக்கத்தின் தடையை நீக்கிய கணவன் அந்த இலக்கத்திற்கு மெசேஜ் அனுப்பியதும் ஆபாசத்துடன் கூடிய கவிதைகள் மற்றும் பாட்டுக்களும் அதனைத் தொடர்ந்து ஆண்களின் ஆபாச தோற்றங்களுடன் கூடிய புகைப்படங்களும் ஆசிரியைக்கு அனுப்பியுள்ளார்.

ஆசிரியையைப் போல குறித்த இலக்கத்திற்கு தொடர்ச்சியாக பெண் போல மேசேஜ் செய்த கணவன் வீட்டுக்கு வருமாறு குறித்த நபருக்கு மெசேஜ் போட்டுள்ளார்.

அந்தத் தகவலை நம்பிய குடும்பஸ்தர் ஆசிரியையின் வீட்டுக்கு சென்ற போது அங்கு காத்திருந்த ஆசிரியையின் கணவனும் அவரது உறவுகளும் குறித்த குடும்பஸ்தரை நையப்புடைத்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான குறித்த குடும்பஸ்தரை அவதானித்த ஆசிரியை குறித்த குடும்பஸ்தர் தனது வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரின் தந்தை எனத் தெரியவந்துள்ளது.

 

 

Share.
Leave A Reply