சிரிய கிளர்ச்சியாளர்கள் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த ஹமா நகரை மூன்று திசைகளிலும் இருந்து சுற்றிவளைத்துள்ளனர்.

சிரிய அரசாங்கம் அலப்போவை அவர்களிடமிருந்து மீள கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ள போதிலும் சிரிய கிளர்ச்சியாளர்கள் ஹமா நகரை கைப்பற்றும் நிலையில் உள்ளனர்.

சிரியாவிற்கும் ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கும் மூலோபாய ரீதியில் ஹமா நகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிரியாவை ஆட்சி செய்பவர்களிற்கும் தங்கள் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு இந்த நகரம் மிகவும் முக்கியமானது.

அலெப்போவை எதிர்பாராத அதிரடி தாக்குதல் மூலம் கைப்பற்றிய ஒரிரு நாட்களிற்குள் ஹமா நகரை கைப்பற்றும் நடவடிக்கையில் சிரிய கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிளர்ச்சிக்காரர்கள் ஹமா நகரை மூன்று திசைகளிலும் சுற்றிவளைத்துள்ளனர், அந்த நகரத்திலிருந்து மூன்று நான்கு கிலோமீற்றர் தொலைவில் உள்ளனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

“டமாஸ்கஸ்: சிரியாவில் அதிரடி தாக்குதல் நடத்திய நாட்டின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவைக் கைப்பற்றியுள்ள கிளா்ச்சிப் படையினா், மற்றொரு முக்கிய நகரான ஹமாவையும் நெருங்கிவருகின்றனா்..

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் அதிபா் அல்-அஸாத் படைகளுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளா்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டன. .

தலைநகா் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட பெரும்பாலான சிரியா பகுதியை அரசுப் படையினா் கைப்பற்றுவதற்கு ரஷியா உதவியது..

இத்லிப் மாகாணம், அலெப்போ மாகாணத்தின் சில பகுதிகள், ராக்கா, ஹசாகாவின் பெரும்பாலான பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் மட்டும் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தன..

இந்தச் சூழலில், அலெப்போ மாகாணத்தில் கிளா்ச்சிப் படையினா் கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்தி அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றினா்.

அவா்களது இந்த அதிரடி தாக்குதலை எதிா்பாா்க்காத ராணுவம் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது..

தொடா்ந்து உறுதியாக முன்னேறி வந்த கிளா்ச்சிப் படையினா், அலெப்போ நகரைக் கைப்பற்றினா்.

அவா்களது முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக ரஷியாவும் சிரியாவும் தொடா்ந்து வான்வழித் தாக்குதல் நடத்திவந்தாலும், அவா்கள் தொடா்ந்து முன்னேறி ஹமா நகரை நெருங்கிவருகின்றனா். அதையடுத்து, அந்த நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேறிவருகின்றனா்.

Share.
Leave A Reply