ஆந்திரப் பிரதேசத்தில் 3 வருடமாக ப்ரொபோஸ் செய்தும் காதலை ஏற்காத 17 வயது சிறுமியை 21 வயது வாலிபர் வீடு புகுந்து தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் நந்திகோட்கூர் நகரில் உள்ள பைரெட்டி காலனியில் தனது தாத்தா பாட்டி வீட்டில் சிறுமி இருந்தபோது நேற்று இரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
களுகோட்லா கிராமத்தைச் சேர்ந்த ராகவேந்திரா [21 வயது] கடந்த சில ஆண்டுகளாக காக்கிநாடா மாவட்டத்தில் சமர்லகோட்டாவைச் சேர்ந்த அந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியைப் பின்தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி தொல்லை செய்து வந்துள்ளார்.
அந்த நபரின் தொல்லை தாங்காமல் அந்த சிறுமி , 6 மாதங்களுக்கு முன்பு நந்திகோட்கூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றார். ஆனால் அங்கும் அவரை பின்தொடர்ந்து ராகவேந்திரா தொல்லை செய்துள்ளான்.
இந்த நிலையில்தான் நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்த ராகவேந்திரா சிறுமி தூங்கிக்கொண்டிருந்த அறையைத் தட்டியுள்ளார். சிறுமி கதவைத் திறந்ததும் உள்ளே நுழைந்து கதவை உள்ளே இருந்து ராஜேந்திர பூட்டினான்.
பின்னர் சிறுமி மீது தான் பாட்டிலில் கொண்டுவந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளான். உதவிக்காகக் கத்த முடியாதபடி சிறுமியின் வாயை ராகவேந்திரா இறுக்கியதாக கூறப்படுகிறது.
தீ பற்றி எறிந்த நிலையில் சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.முன்னதாக சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும், சிறுமியின் பாட்டி விழித்து கதவை தட்டியுள்ளார். ஆனால் சிறுமி முழுவதும் எறிந்த பிறகே ராகவேந்திரா கதவை திறந்துள்ளான்.
ராகவேந்திராவின் உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து தப்பியோட முயன்ற அவனை அவரது அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் ராகவேந்திராவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.