ஜப்பானில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் குறைந்துவரும் பிறப்பு விகிதத்தை சரிக்கட்டும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக டோக்கியோ பெருநகர அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற புதிய பணி அட்டவணை சார்ந்த கொள்கையை டோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதேப் போன்று தொடக்க கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் முன்கூட்டியே வேலைநேரத்தில் இருந்து செல்லும் புதிய கொள்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 2023ஆம் ஆண்டில் 7.27 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்தன.

Share.
Leave A Reply