இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் தனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் அல்லது தன்னை இலங்கைக்கு திரும்பி அனுவேண்டும் என மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்கள்தெரிவித்துள்ளன.

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக இலங்கை தமிழ் இளைஞர் முழந்தாளிட்டு தனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குமாறும் அல்லது இலங்கைக்கு அனுப்புமாறும் கோரும் வீடியோவை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இராமநாதபுரம் ஆட்சியர் இலங்கைக்கு தன்னை திருப்பி அனுப்பு மறுக்கின்றார் அதேவேளை தனக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பிலான ஆவணங்களையும் வழங்க மறுக்கின்றார் என ஜொய் என்ற அந்த இளைஞன் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தின் முன்னாள் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிடம் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது.

இராமநாதபுரம் ஆட்சியரிடம் நான் பத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை கையளித்துவிட்டேன்,என யாழ்ப்பாண இளைஞன் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது.

தான் பல வருடகாலமாக இந்த விடயத்துடன் போராடிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

Share.
Leave A Reply