தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகருக்கருகில் உள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் – காசாவுக்கிடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியிலிருந்து மோதல் இடம்பெற்று வரும் நிலையில், இரு தரப்பிலும் சுமார் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு 100 இற்கும் அதிகமானோர் பணயக் கைதிகளாக உள்ளனர்.
இந்நிலையில், தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகருக்கருகில் உள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அப் பாடசாலையில் போரினால் வீடுகளை இழந்த பலஸ்தீன மக்கள் முகாமிட்டு தங்க வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண முகமை எனக் கூறப்படுகிறது.