வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி அபிநவ நிசபா பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு அடுத்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் மகேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மனு, செவ்வாய்க்கிழமை (17) பரிசீலிக்கப்பட்டது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ஜுன ராமநாதன் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அர்ஜுன ராமநாதன் பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் போது அரசாங்க வைத்தியராக கடமையாற்றி வந்தார்.
பாராளுமன்றத் தேர்தல் சட்டம் மற்றும் பிற அரசியலமைப்புச் சட்டங்களின்படி, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.