“அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார்.

பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

திரைப்படத்தின் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் வருண் தவானுக்கு தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியில் நான் உங்களை நேசிக்கிறேன் என்ற சொல்லை மூன்று மொழிகளிலும் பேச கற்றுக் கொடுக்கும் வீடியோ தற்பொழு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply