உலகின் மிக பணக்கார குடும்பங்கள் பற்றிய பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வால்டன் குடும்பம் முதலிடத்தை பிடித்துள்ளது.
வால்டன் குடும்பம் உலகம் முழுவதும் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டை நடத்திவருகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு, ஸாம் வால்டன் இந்த நிறுவனத்தின் முதல் சூப்பர்மார்க்கெட்டை திறந்தார். இன்று அவரது சந்ததியினர் முன்பை விட அதிக செல்வம் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
இதற்கு காரணம், இந்த பன்னாட்டு நிறுவனத்தின் பங்குகளின் அபாரமாக செயல்திறன் ஆகும். தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு டாப்10 பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான குடும்பங்கள் பங்குச் சந்தையால் பெரிதும் பயனடைந்துள்ளன.
இந்த பட்டியலில் மொத்தம் 25 குடும்பங்கள் உள்ளன. முதல் பத்து இடங்களில் எந்தெந்த குடும்பங்கள் இருக்கின்றன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
1. வால்டன் குடும்பம் வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டனின் மகள் ஆலிஸ் வால்டன்
நிறுவனம் – வால்மார்ட்
நிகர சொத்து மதிப்பு: 432 பில்லியன் அமெரிக்க டாலர்
நாடு: அமெரிக்கா
தலைமுறை: 3வது
இந்த சூப்பர் மார்க்கெட் சங்கிலி நிறுவனத்தின் பங்குகுளில் சுமார் 46% வால்டன் குடும்பத்திற்கு சொந்தமானது. உலகின் பணக்கார குடும்பத்தின் செல்வத்திற்கு அடிப்படை இந்த பங்குகளே ஆகும். இந்த நிறுவனத்தின் உரிமையாளரான சாம் வால்டன், தான் சேர்த்த செல்வத்தை தனது குழந்தைகளிடையே பிரித்து கொடுத்தார். இதன் மூலம், அவரது குடும்பம் இந்த செல்வத்தை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கருதினார்.
அல் நஹ்யான் குடும்பம் எண்ணெய் வணிகத்தின் மூலம் செல்வத்தை குவித்துள்ளது
2. அல் நஹ்யான் குடும்பம்
குடும்பம்: அல் நஹ்யான்
துறை: தொழிற்துறை
நாடு: ஐக்கிய அரபு அமீரகம்
நிகர சொத்து மதிப்பு: 323 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
தலைமுறை: 3வது
ஐக்கிய அரபு அமீரகத்தை ஆளும் இந்த குடும்பம் எண்ணெய் வணிகம் மூலம் அதன் செல்வம் சேர்த்துள்ளது.
இந்த குடும்பத்தை சேர்ந்த ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருக்கிறார்.
கத்தார் நாட்டின் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த அல் தானி குடும்பம் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்களை செய்து வருகின்றது.
3. அல் தானி குடும்பம்
குடும்பம்: அல் தானி
நிகர சொத்து மதிப்பு: 172 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
துறை: தொழில்துறை
நாடு: கத்தார்
தலைமுறைகள்: 8வது
கத்தார் நாட்டின் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த அல் தானி குடும்பம் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்களை செய்து வருகின்றது.
இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர் மற்றும் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய வணிகங்களை செய்து வருகின்றனர்.
ஆக்செல் டுமாஸ் இந்த நிறுவனத்தின் செயல் தலைவராக உள்ளார்
4. ஹெர்ம்ஸ் குடும்பம்
குடும்பம்: ஹெர்ம்ஸ்
நிகர சொத்து மதிப்பு: 170 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
நாடு: பிரான்ஸ்
தலைமுறை: 6வது
இந்த குடும்பத்தின் ஆறாவது தலைமுறை பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆடம்பரமான பேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறது.
இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுள் பலர் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர்தான் ஆக்செல் டுமாஸ். இவர் தற்போது நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக உள்ளார்.
ஒரு பிரச்னைக்கு பிறகு சார்லஸ் மற்றும் டேவிட் மட்டுமே கோச் குடும்பத்தின் வணிகத்தை தொடர்ந்தனர்.
5. கோச் குடும்பம்
குடும்பம்: கோச்
நிகர சொத்து மதிப்பு: 148 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
நாடு: அமெரிக்கா
தலைமுறை: 3வது
ஃபிரடெரிக், சார்லஸ், டேவிட் மற்றும் வில்லியம் கோச் ஆகியோர் எண்ணெய் நிறுவனத்தை தங்கள் தந்தை பிரெட்டிடமிருந்து பெற்றனர். ஆனால் ஒரு பிரச்னைக்கு பிறகு, சார்லஸ் மற்றும் டேவிட் மட்டுமே இந்த வணிகத்தை தொடர்ந்ததர்.
எண்ணெய், ரசாயனங்கள், ஆற்றல், கனிமங்கள், கிளவுட் கம்ப்யூட்டிங், நிதி மற்றும் பிற துறைகளில் கோச் நிறுவனத்தின் வணிகம் பரவியுள்ளது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்
6. அல் சௌத் குடும்பம்
குடும்பம்: அல் சௌத்
துறை: தொழில்துறை
நிகர சொத்து மதிப்பு: 140 பில்லியன் அமெரிக்க டாலர்
நாடு: சௌதி அரேபியா
தலைமுறை: 3வது
சௌதி அரேபியாவின் இந்த அரச குடும்பத்தின் செல்வம் எண்ணெய் வியாபாரத்தில் இருந்து வருகிறது.
கடந்த 50 ஆண்டுகளாக இந்த அரச குடும்ப உறுப்பினர்கள் பெற்ற செல்வத்தின் அடிப்படையில் ராயல் திவானின் மொத்த செல்வத்தை ப்ளூம்பெர்க் நிறுவனம் மதிப்பிடுகிறது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் மட்டுமே ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன.
ஜாக்குலின் மார்ஸ் (நடுவில்) தனது பேத்திகளுடன்
7. மார்ஸ் குடும்பம்
குடும்பம்: மார்ஸ்
நிறுவனத்தின்: மார்ஸ் இன்க்.
நிகர சொத்து மதிப்பு: 133 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
நாடு: அமெரிக்கா
தலைமுறை: 5வது
மார்ஸ் நிறுவனம் முக்கியமாக M&M, Milky Way மற்றும் Snickers சாக்லேட்களுக்கு பெயர் பெற்றது. இருப்பினும், இப்போது நிறுவனத்தின் வருவாயில் பாதிக்கும் மேற்பட்டவை செல்லப்பிராணி பராமரிப்புக்கு தேவையான தயாரிப்புகளிலிருந்து வருகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி.
8. அம்பானி குடும்பம்
குடும்பம்: அம்பானி
நிறுவனம்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
நிகர சொத்து மதிப்பு: 99 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
நாடு: இந்தியா
தலைமுறை: 3வது
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் உரிமையாளர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி.
முகேஷ் அம்பானி மும்பையில் 27 மாடி கட்டடத்தில் வசித்து வருகிறார். இது உலகின் மிக விலையுயர்ந்த தனிநபர் வாழக்கூடிய ஒரு வீடாக கருதப்படுகிறது.
ஆலன் மற்றும் ஜெரார்ட் வெர்தெய்மர் ஆகியோர் ஷேனல் என்னும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
9. வெர்தெய்மர் குடும்பம்
குடும்பம்: வெர்தெய்மர்
நிறுவனத்தின்: ஷேனல்
நிகர சொத்து மதிப்பு: 88 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
தலைமுறை: 3வது
ஆலன் மற்றும் ஜெரார்ட் வெர்தெய்மர் ஆகியோர் ஷேனல் என்னும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களது தாத்தாவிடமிருந்து சொத்துக்களை பெற்றனர்.
இவர்களது தாத்தா 1920 களில் பாரிஸில் ஆடை வடிவமைப்பாளரான கோகோ ஷெனலுக்கு நிதியளித்தார். இது இறுதியில் பிரபலமான ஷெனல் பிராண்டின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
டேவிட் தாம்சன், தாம்சன் ராய்ட்டர்ஸ் தலைவர்
10. தாம்சன் குடும்பம்
குடும்பம்: தாம்சன் ராய்ட்டர்ஸ்
நிகர சொத்து மதிப்பு: 87 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
நாடு: கனடா
தலைமுறை: 3வது
நிதி தரவு தகவல் நிறுவனமான தாம்சன் ராய்ட்டர்ஸில் சுமார் 70% பங்குகள் இந்த குடும்பத்திற்கு சொந்தமானது.
1930களில் ராய் தாம்சன் ஒன்டாரியோவில் வானொலி நிலையத்தைத் திறந்த போது, இந்த குடும்பம் செல்வத்தைப் பெறத் தொடங்கி கனடாவின் பணக்காரக் குடும்பமாக மாறியிருக்கிறது.
பிபிசி