குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்படும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ஓராண்டுக்கு இடைநிறுத்துமாறு அல்லது சாரதி அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்யுமாறு நீதிமன்றில் கோருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மதுபோதையில் சாரதிகள் அடிக்கடி வாகனங்களை செலுத்துவதை காணக்கூடியதாக உள்ளதாகவும், இது தொடர்பாக அபராதம் அதிகரிக்கப்பட்டால் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அதிகாரி, வியாழக்கிழமை (26) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 395 சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்

அதே 24 மணி நேரத்தில், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டியதற்காக 50 சாரதிகள் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக 120 சாரதிகள் மீதும், போக்குவரத்து விதிமீறல்களுக்காக 1,262 சாரதிகள் மீதும், 682 சாரதிகள் மீது உரிமம் மீறியதற்காகவும், 5,441 சாரதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 7,950க்கு எதிரான சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை தொடரும் என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Share.
Leave A Reply