உக்ரைன் அதிபர், சுந்தர் பிச்சை போன்றவர்களுடன் டொனால்ட் ட்ரம்ப் பேசும்போதெல்லாம் எலான் மஸ்கும் இணைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். ட்ரம்பின் வெற்றி உரையின்போது கூட, “ எங்களிடம் ஒரு புதிய நட்சத்திரம் இருக்கிறது,

அந்த நட்சத்திரம் எலான். அவர் அற்புதமான நபர். நெருங்கிய நண்பர்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ட்ரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதும், எலான் மஸ்க்குக்கு ஒரு பதவி வழங்கப்படலாம் என்ற செய்திகள் வெளியானது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, உக்ரைன் அதிபர், சுந்தர் பிச்சை போன்றவர்களுடன் டொனால்ட் ட்ரம்ப் பேசும்போதெல்லாம் எலான் மஸ்கும் இணைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இந்த நிலையில், அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் குடியரசுக் கட்சி மாநாடு நடந்தது. அதில் டொனால்ட் ட்ரம்ப்ப்டம் எலான் மஸ்க் அமெரிக்க அதிபராக முடியுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து உரையாற்றிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அமெரிக்காவின் அதிபராக முடியாது. அதை உங்களுக்கு உறுதியாகச் சொல்ல முடியும்.

ஏன் தெரியுமா? தென்னாப்பிரிக்காவில் பிறந்த டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் முதலாளி இந்த நாட்டில் (அமெரிக்காவில்) பிறக்கவில்லை. அமெரிக்க அரசியலமைப்பு ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது.” என்றார்.

Share.
Leave A Reply