கோவில்களில் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பொதுமக்கள் பல்வேறு நேர்த்திகடன் செலுத்துவார்கள். மேலும் ஒரு சில கோவில்களில் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி அம்மனுக்கு மாலையாக அணிவிப்பார்கள்.

இந்த நிலையில் கர்நாடகாவில் ஒருவர் வித்யாசமாக தனது மாமியார் சீக்கிரம் சாக வேண்டும் என்று ரூபாய் நோட்டில் எழுதி உண்டியலில் போட்டுள்ளார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் டிரெண்டிங் ஆகி வருகிறது.

அதுப்பற்றிய விபரம் வருமாறு:-கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் அப்ஜலாபுரா தாலுகாவில் புகழ்பெற்ற கட்டரக பாக்யவந்தி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

இந்த நிலையில் கோவிலின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. அப்போது ஒரு 20 ரூபாய் நோட்டில் “அம்மா எங்கள் மாமியார் சீக்கிரம் சாக வேண்டும் அம்மா” என்று எழுதப்பட்டு இருந்தது.

இதைப்பார்த்த ஊழியர் ஒருவர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றார். இந்த ரூபாய் நோட்டு தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. மாமியாரின் நெருக்கடி தாங்க முடியாத யாரோ? ஒருவர் அம்மனுக்கு கோரிக்கையாக எழுதி இந்த ரூபாய் நோட்டை உண்டியலில் காணிக்கையாக போட்டது தெரியவந்தது.

இது குறித்து கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் குத்ரே என்பவர் கூறியதாவது:-கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.60 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு கிலோ வெள்ளி ஆபரணங்கள், 200 கிராம் தங்கம் இருந்தது. மேலும் மாமியார் மரணத்திற்கு ஆசைப்பட்டு எழுதிய ஒரு ரூபாய் நோட்டும் இருந்ததாக தெரிவித்தார். “,

Share.
Leave A Reply