கிறிஸ்மஸ் தினத்தன்று அஜர்பைஜானின் பயணிகள் விமானம் விழுந்து நொருங்கிய சம்பவத்திற்கு  ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மன்னிப்பு கோரியுள்ளார்.

எனினும் அவர் இதற்கு ரஸ்யாவின் தவறே இந்த விமான விபத்திற்கு  என நேரடியாக குறிப்பிட தவறியுள்ளார்.

உக்ரைனின் ஆளில்லா விமானங்களிற்கு எதிராக ரஸ்யாவின் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தவேளை துன்பியல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியெவினை  தொலைபேசி மூலம் தொடர்புகொண்டவேளை புட்டின் இதனை தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் வான்வெளியில் இடம்பெற்ற இந்த மன்னிப்பு கோரிய புட்டின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply