எனது மகன் இறந்துவிட்டான் என்று நடிகை த்ரிஷா தன்னுடைய X பக்கத்தில் ஒரு சோகமான செய்தியைப் பதிவு செய்திருக்கிறார்.

நடிகை த்ரிஷா, ஜோரோ என்று பெயரிடப்பட்ட நாயை செல்லமாக வளர்த்து வந்தார். அவ்வப்போது அதனுடன் நேரத்தை செலவிடுவதும் வழக்கம்.

திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறந்துவந்தாலும், படப்பிடிப்புகள் இல்லாத நேரத்தில் வீட்டில் இருக்கும்போது ஜோரோவுடன்தான் இருப்பார். அது தொடர்பான புகைப்படங்களும் ஊடகங்களில் வரவியிருந்தது.

இன்று (25) அதிகாலையில், அவர் வளர்த்து வந்த ஜோரோ, உயிரிழந்துவிட்டதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். என் மகன் ஜோரோ, கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் உயிரிழந்தான். இனிமேல் என் வாழ்க்கை பூஜ்ஜியம் என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். நானும் எனது குடும்பமும் அதிர்ச்சியில் உடைந்துபோயுள்ளோம். சிறிது காலம் பணியில் இருந்து விலகியிருக்க உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply