யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (30) வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் உச்சிக்காடு, கரணவாய் தெற்கைச் சேர்ந்த மாணிக்கம் குணசேகரம் (வயது- 65) என்ற வயோதிபராவார்.

இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர், தனிமையில் வசித்து இருந்த நிலையில் நேற்று (30) கட்டிலில் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்க்கு சென்ற கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத சோதனைக்கு உத்தரவிட்டார். இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply