ஏழையின் சொல் அம்­பலம் ஏறாது என்­பார்கள். மறு­த­லையின் உண்­மை­யாக, செல்வம் படைத்­தவன் சொன்னால் அம்­ப­லத்தின் ஆட்­டமும் மாறும் எனலாம்.

இது எங்கு, எவ­ருக்கு பொருந்­து­கி­றதோ இல்­லையோ, அமெ­ரிக்­கா­வுக்கு, இலோன் மஸ்க்­குக்கு சாலவும் பொருந்­து­கி­றது.

உலகின் முன்­னணி தொழில்­நுட்ப கம்­ப­னி­களின் உரி­மை­யாளர், டெஸ்லா என்ற கார்த் தயா­ரிப்பு கம்­பனி, ஸ்பேஸ்-எக்ஸ் என்ற விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வனம், எக்ஸ் என்ற சமூக ஊடக வலை­தளம் கம்­ப­னி­களின் பெயர்­களை இப்­படி பட்­டியல் இட்டுக் கொண்டே போகலாம்.

சேர்த்துப் பார்த்து மதிப்­பிட்டால், 400 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான சொத்­துக்­க­ளுக்கு உரிமை கொண்­டாடக் கூடிய உலகின் மிகப்­பெரும் செல்­வந்தர்.

இலோன் மஸ்க் ஜனா­தி­பதி தேர்­தலில் டொனால்ட் ட்ரம்­புக்கு உதவி செய்தார். பிர­சா­ரத்­திற்கு பெரு­ம­ளவு காசு கொடுத்தார்.

இந்த உத­விக்கு பிரதி உப­கா­ர­மாக ஆட்சி அதி­கார கட்­ட­மைப்பில் முக்­கி­ய­மா­ன­தொரு பத­வியை வழங்கப் போவ­தாக ட்ரம்ப் அறி­வித்­துள்ளார்.

அரச செயற்­றிறன் திணைக்­களம் என்ற அமைப்பை உரு­வாக்கி அதன் தலைமைப் பத­வியை இலோன் மஸ்க்­குக்கு வழங்­கு­வது ட்ரம்பின் திட்டம்.

இதன்­மூலம், அமெ­ரிக்க அர­சி­யலில் இலோன் மஸ்க்கின் ஆதிக்­கத்தை வலு­வாக உறு­திப்­ப­டுத்­து­வது ட்ரம்பின் நோக்­க­மாக இருக்­கலாம்.

சம­கால அர­சியல், சமூக, பொரு­ளா­தார, தொழில்­நுட்ப உலகில் இலோன் மஸ்க்கின் பாத்­திரம் எந்த வகை­யிலும் தவிர்க்க முடி­யா­தது. ஆனால், அது தீவிர சர்ச்­சைக்­கு­ரி­யது.

ஒரு­பு­றத்தில் வலு­வான இலட்­சி­யமும், தொலை­நோக்கும் கொண்டு உலகை அடுத்த கட்­டத்­திற்கு நகர்த்தும் தொழில்­வாண்­மை­யாளர். மறு­பு­றத்தில், தமது தொழில்­நுட்­பத்தைத் தாண்­டியும் அர­சியல் ஆதிக்­கத்தை செலுத்த முனையும் ஆளுமை.

அமெ­ரிக்­காவின் அர­சி­யலைக் கட்­ட­மைத்து, சர்­வ­தேச அர­சியல் கருத்­தா­டல்கள் எத்­தி­சையில் செல்ல வேண்டும் என்­பதை தீர்­ம­னிக்­கக்­கூ­டிய சக்­தி­யாக தம்மை மாற்றிக் கொள்ள இலோன் மஸ்க் எத்­த­னிக்­கிறார்.

இந்த எத்­த­னிப்பு சம­கால செயற்­பா­டு­களில் தெளி­வாக வெளிப்­ப­டு­வதை அவ­தா­னிக்­கலாம்.

டுவிட்டர் என்ற சமூக வலை­த­ளத்தை இலோன் மஸ்க் என்று கொள்­வ­னவு செய்­தாரோ, அதனை ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்­தாரோ அன்­றைய நாளில் இருந்து அவ­ரது எத்­த­னிப்பு தீவிரம் பெற்­றது.

மேற்­கு­லகைப் பொறுத்­த­வ­ரையில், ‘எக்ஸ்’ என்­பது மிகவும் செல்­வாக்கு செலுத்­தக்­கூ­டிய சமூக ஊடகம்.

உலகின் பல நாடு­களைச் சேர்ந்த கோடிக்­கணக்­கான பய­னர்கள் எக்ஸில் இணைந்­தி­ருக்­கி­றார்கள். இவர்­களில் செல்­வாக்கு செலுத்­தக்­கூ­டிய அர­சி­யல்­வா­திகள், வர்த்­தக பிர­மு­கர்கள், வாக்­கா­ளர்கள் என்று பல தரப்­பி­னரும் உள்­ள­டங்­கு­கி­றார்கள்.

இந்த பய­னர்­களின் மீது தாம் விரும்பும் கருத்தை திணிக்கும் சக்தி இலோன் மஸ்க்­கிற்கு உண்டு. ஒரு விடயம் பற்றி பய­னர்கள் பல கோணங்­களில் கருத்து சொல்­கி­றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

எந்­தெந்த கருத்­துக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கலாம், எந்தக் கருத்தை பெருப்­பித்துக் காட்டி, எந்தக் கருத்தை மூலையில் தள்ளி விட­லா­மென இலோன் மஸ்க் தீர்­மா­னிக்­கலாம்.

இதற்­கு­ரிய தொழில்­நுட்ப கரு­வி­களும், கொள்­கை­களும் எக்ஸ் தளத்­திற்கு உண்டு. தொழில்­நுட்ப உலகில் ‘அல்­கோ­ரிதம்’, ‘கன்டன்ட் மனேஜ்மன்ட்’ என்­றெல்லாம் விப­ரிப்­பார்கள்.

இவ்­வாண்டு நடுப்­ப­கு­தியில் பிரிட்­டனில் முஸ்லிம் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட கல­வ­ரத்தைத் தூண்­டி­யதன் பின்­ன­ணியில், எக்ஸ் தளத்­திற்கு முக்­கி­ய­மான பங்கு இருக்­கி­றது.

பிரிட்­டனில் சிவில் யுத்தம் ஏற்­ப­டு­வதை தவிர்க்க முடி­யாது என்று இலோன் மஸ்க் பதி­விட்­ட­தையும், அதன் அர­சியல் விளை­வு­க­ளையும் ஒரு உதா­ர­ண­மாக கூறலாம்.

ஜேர்­ம­னியில் வெளி­நாட்­ட­வர்கள் வந்து குடி­யே­று­வதை ஆட்­சே­பிக்கும் ஏ.எவ்.டி என்ற கடும்­போக்கு தீவிர வல­து­சாரி கட்­சி­யையும் இலோன் மஸ்க் ஆத­ரித்தார். இந்தக் கட்­சியே ஜேர்மன் மக்­களை மீட்­டெ­டுக்­கக்­கூ­டிய ஆபத்­பாந்­தவன் என்று பதி­விட்டார்.

இது நடு­நி­லைத்­தன்மை சார்ந்த ஊடக நெறி­மு­றை­க­ளுக்கு முர­ண­னா­னது மாத்­தி­ர­மன்றி, ஐரோப்­பிய ஒன்­றியம் சார்ந்த சட்­டங்­க­ளையும் மீறு­கி­றதா என்ற கரி­சனை வெளி­யி­டப்­பட்­டது.

இதே­போன்று தான், வெனி­சு­வே­லாவின் ஜனா­தி­பதி தேர்­த­லிலும் இலோன் மஸ்க் செல்­வாக்கு செலுத்த முனைந்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது.

இதில் முக்­கி­ய­மான விஷயம் யாதெனில், இலோன் மஸ்க்­கிற்கு இருக்கும் அர­சியல் சார்­பு­நிலை. சுற்­றாடல் பாது­காப்பு போன்ற விட­யங்­களில் தாரா­ள­ம­ய­வாத சிந்­த­னையை அனு­ச­ரிக்கும் மஸ்க், குடி­யேற்றம் போன்ற விட­யங்­களில் ட்ரம்ப்பை விடவும் மோச­மான பழ­மை­வா­தி­யாக செயற்­ப­டுவார்.

இந்த இரட்டை வேடம், அர­சியல் நோக்கம் கொண்­டது என்றும் கூறு­வார்கள். வெவ்­வேறு கருத்­து­நி­லை­களை அனு­ச­ரிக்கும் அர­சியல் குழுக்­களை ஈர்த்து, தமது சிந்­த­னையை மைய­மாகக் கொண்ட அர­சியல் கோட்­பாட்டு அடித்­த­ளத்தை உரு­வாக்க இலோன் மஸ்க் முனை­கிறார் என்ற விமர்­ச­னத்தை தவிர்க்க முடி­யாது.

ஒரு புறத்தில் தகவல் என்றால், மறு­பு­றத்தில் பணத்தை வீசி­யெ­றியும் ஆற்றல். அர­சியல் பிர­சா­ரங்­க­ளுக்கும், அர­சியல் மாற்­றத்தைக் கோரி போராடும் அமைப்­புக்­க­ளுக்கும், அர­சியல் செயற்­பாட்டுக் குழுக்­க­ளுக்கும் நிதி வழங்­கக்­கூ­டி­ய­வ­ராக இலோன் மஸ்க் திகழ்­கிறார்.

தேர்­தலில் போட்­டி­யிட்ட பல கட்­சி­க­ளுக்கும் உதவி செய்து நடு­நி­லை­யாக உதவி செய்­யக்­கூ­டி­ய­வ­ராக தம்மை சித்­த­ரித்துக் கொள்வார். சகல தரப்­புக்­க­ளி­னதும் நல்­லெண்­ணத்தை பெறு­வதில் உள்ள அனு­கூ­லங்­களைப் பயன்­ப­டுத்திக் கொள்ளும் சூட்­சுமம் அதில் மறைந்­தி­ருக்கும்.

அமெ­ரிக்­காவை எடுத்துக் கொள்வோம். எந்தத் தரப்பு ஆட்சி பீடத்­திற்கு தெரி­வான போதிலும், அதன் ஆத­ரவு இலோன் மஸ்க்­கிற்கு அவ­சியம். குறிப்­பாக டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு வரிச்­ச­லு­கைகள் பெறு­வது முதற்­கொண்டு, ஒப்­பந்­தங்­களை ஏற்­ப­டுத்­து­வது வரை பல விட­யங்­க­ளுக்கும் அர­சாங்­கத்தின் ஆத­ரவு தேவை. எனவே, வெறு­மனே கோட்­பாட்டு ரீதி­யான விட­யங்­க­ளுக்­காக மாத்­தி­ர­மன்றி, தமது வர்த்­தக நல­னுக்­கா­கவும் அர­சியல் கட்­சி­களை அவர் தந்­தி­ர­மாக அணு­குவார். தீவிர செல்­வாக்கு செலுத்தும் அள­வுக்கு தம்மை வளர்த்துக் கொள்வார். இன்று நாசா நிறு­வனம் செய்­ம­தி­களை விண்­வெ­ளிக்கு அனுப்ப நினைத்தால், இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறு­வ­னத்தின் துணை வேண்டும்.

இந்த நிறு­வ­னத்தின் கிளை­யாக இயங்கும் ஸ்டார் லிங்க் பற்­றியும் குறிப்­பிட்­டாக வேண்டும். இவ்­வ­மைப்பு உலகின் மிகவும் பின்­தங்­கிய பிர­தே­சங்­க­ளுக்கும் ‘ப்ரோட்பான்ட்’ இணைய வச­தி­களை வழங்­கு­கி­றது. உக்ரேன் முதல் காஸா வரை ஆயு­த­மேந்தி சண்­டை­யிடும் தரப்­புக்கள் ஸ்டார் லிங்கின் இணைய வச­தி­களை தவிர்க்க முடி­யாது.

உண்­மையில், உக்­ரே­னிய யுத்தம் ஆரம்­பித்த நாள் தொடக்கம் இலோன் மஸ்க் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுடன் தொடர்பில் இருந்­ததை அமெ­ரிக்­காவின் முன்­னணி பத்­தி­ரி­கை­யொன்று ஆதா­ரத்­துடன் அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இலோன் மஸ்க்­குக்கும் டொனால்ட் டரம்­புக்கும் இடை­யி­லான உறவு சம­கால அர­சியல் அரங்கில் தவிர்க்க முடி­யாத பேசு­பொருள். ஜன­வ­ரியில் டரம்ப் பத­வி­யேற்ற பின்னர், மஸ்க் தான் நிழல் ஜனா­தி­ப­தி­யென ஜன­நா­யகக் கட்சி விமர்­சிக்கும் அள­வி­லான உறவை இரு­வரும் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இந்த உறவில் முரண்­பா­டான சந்­தர்ப்­பங்கள் உண்டு. ட்ரம்பின் சில கொள்­கைகள் தமக்கு பிடிக்­கா­தென இலோன் மஸ்க் கூறுவார். முன்னர், உலகின் சுற்­றாடல் பாது­காப்பு பற்­றிய பாரிஸ் உடன்­ப­டிக்­கையில் இருந்து அமெ­ரிக்­காவை டொனால்ட் ட்ரம்ப் விலக்கிக் கொண்­டதை அடுத்து, அப்­போ­தைய ஆலோ­சனைக் குழுக்­களில் இருந்து இலோன் மஸ்க் பதவி வில­கி­யதைக் கூறலாம்.

ஆனால், டுவிட்டர் வலை­த­ளத்தில் தடை செய்­யப்­பட்­டி­ருந்த ட்ரம்பின் கணக்கை எக்ஸ் வலை­த­ளத்தில் மீளத் தொடங்க இட­ம­ளித்து, ட்ரம்பின் ஆத­ர­வா­ளர்கள் வீரி­யத்­துடன் இயங்க களம் அமைத்துக் கொடுத்­ததை மறக்க முடி­யாது. ட்ரம்பின் தீவிர வல­து­சாரிக் கொள்­கை­க­ளுடன் தமது கருத்­துக்கள் ஒத்துப் போனதால், இலோன் மஸ்க் இவ்­வாறு செய்தார் என்ற விமர்­ச­னங்கள் உண்டு.

‘மெட்டா’ நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் மார்க் ஸக்­கர்பேர்க் போன்­ற­வர்­களும் உலக அளவில் செல்­வாக்கு செலுத்­தக்­கூ­டி­ய­வர்கள் தாம். ஆனால், ஊடகம், தொழில்­நுட்பம், வணிகம் போன்ற துறைகள் சார்ந்து ஆகக்­கூ­டு­த­லான செல்­வாக்கு செலுத்தும் ஆற்றல் இலோன் மஸ்க்­கி­டமே உண்டு.

எக்ஸ் வலை­த­ளத்தில் தனக்­குள்ள அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி தமது வணி­கத்­தையோ, அர­சி­ய­லையோ மேம்­ப­டுத்தும் நோக்­கத்­துடன் இலோன் மஸ்க் செயற்­ப­டு­வா­ராயின் அது சிக்­கலை ஏற்­ப­டுத்­தலாம் என்று விமர்­ச­கர்கள் வாதி­டு­கி­றார்கள்.

இது தவிர, இலோன் மஸ்க் என்ன நேரத்தில் என்ன செய்வார் என்­பதை அனு­மா­னிக்க முடி­யாமல் இருப்­பதால், அர­சியல் ரீதி­யாக செல்­வாக்கு செலுத்­தக்­கூ­டிய அவ­ரது ஆளுமை குறித்தும் பிரச்­சினை இருக்­கி­றது. அவர் இடும் பதி­வுகள் சில சந்­தர்ப்­பங்­களில் முன்­னுக்கு முர­ணாக இருந்த சந்­தர்ப்­பங்கள் உள்­ளன. ஒரு குழா­யடி சண்­டையில் வம்­பி­ழுத்தல் என்ற அள­விற்கு எலன் மஸ்க் கீழி­றங்­கிய சந்­தர்ப்­பங்­களும் உண்டு.

ஒரு ஜன­நா­யக கட்­ட­மைப்பு என்றால், அது சரி சம­மான விகி­தத்தில் சக­ல­தையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த வேண்டும். ஆனால், செல்­வமும், ஊடக பலமும் இருப்­பதால், எலன் மஸ்க்கின் ஆதிக்கம், சாதா­ரணப் பிர­ஜை­களின் குரல்­களை ஒதுக்கி விடக்­கூ­டிய அபாயம் உண்டு.

இந்த மனிதர் அர­சி­யலைத் தேர்ந்தெடுக்கப்போகிறாரா அல்லது வெளியில் இருந்து செல்வாக்கு செலுத்தி அரசியலை கட்டமைக்கப் போகிறாரா என்பது தெரிய வில்லை. ஆனால், அமெரிக்க அரசியலில் இவரது தாக்கம் தவிர்கக முடியாததாக மாறியிருக்கிறது.

சமகால உலகில் அரசியலும், தொழில் நுட்பமும் மென்மேலும் பின்னிப் பிணைந்தவையாக மாறி வரும் சூழ் நிலையில், இலோன் மஸ்க் போன்ற ஆளுமைகளின் வகிபாகம் தவிர்க்க முடியாத முன்னுதாரணங்களாகவும் திகழ்கின்றது.

இலோன் மஸ்க்கின் கதையில் இனிமேல் தான் முக்கியமான திருப்பங்கள் இருக்கின்றன. எத்தகைய திருப்பங்கள் வந்தாலும், அரசியல் அரங்கில் அவரது பிரசன்னம், மெய்யாகவே மாற்றத்திற்கான காரணியாக உள்ளது.

அரசியல், வணிகம், தொழில்நுட்பம் ஒன்றையொன்று இடைவெட்டும் வட்டங்கள் என்றால், வட்டத்தின் கோடுகளை அவர் எவ்வாறு இல்லாமல் செய்கிறார் என்பதை ஒட்டுமொத்த உலகமும் ஆச்சர்யத்துடனும், அச்சத்துடனும் அவதானித்துக் கொண்டி ருக்கிறது.

சதீஷ் கிருஷ்­ண­பிள்ளை Virakesari

Share.
Leave A Reply