தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
15 வருடங்களாக ஆண்டனி தட்டிலை காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் காதலை அறிவித்தார்.
ஆனால் கீர்த்தி சுரேஷ் காதல் குறித்து சில நண்பர்களுக்கு மட்டும் முன்பே தெரியும் என கூறியுள்ளார்.
இது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:-என்னுடைய காதல் குறித்து யாருக்கும் தெரியாது. என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரியும்.
மேலும் நடிப்புத்துறையில் சமந்தா, ஜெகதீஷ் (ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் பயணித்து வருகிறார்), அட்லீ, ப்ரியா, கல்யாணி, ஐஸ்வர்யா லெஷ்மி, விஜய் சார் என வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.
2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எங்களின் திருமணத்திற்கு திட்டமிட்டோம்.எங்கள் காதல் விவகாரம் முன்பே வெளிவரும் என்று நான் நினைத்தேன்,
ஆனால் நாங்கள் எப்படியோ சமாளித்துவிட்டோம். நாங்கள் இருவரும் எங்கள் தனிப்பட்ட விஷயங்களை முடிந்தவரை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்புகிறோம்.
எங்கள் முதல் வெளிநாட்டுப் பயணம் கூட 2017-ம் ஆண்டு ஜெகதீஷ் எங்களை பாங்காக் அழைத்துச் சென்றபோதுதான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் முதல் முறையாக தனிப்பயணம் சென்றோம் என்றார்.
மேலும், தான் 12-ம் வகுப்பு படிக்கும் போது ஆண்டனியை காதலிக்க தொடங்கியதாக கூறும் கீர்த்தி, அவர் தன்னை விட ஏழு வயது மூத்தவர் என்றும் கத்தாரில் வேலை செய்வதாகவும் கூறினார்.