சென்னை: 15 வயது மகனை காணவில்லை என்று, சிறுவனின் அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்திருந்த நிலையில், இது தொடர்பான நடவடிக்கையை போலீசார் நடத்தி, காணாமல் போன சிறுவனையும் பத்திரமாக மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

சென்னை எம்ஜிஆர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 16ம்தேதி, பெண் ஒருவர் தன்னுடைய மகனை காணவில்லை என்று புகார் தந்தார்.. அந்த புகார் மனுவில் உள்ளதாவது:

“என்னுடைய மகன், அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்தான். ஆனால் அவன் தேர்ச்சி பெறவில்லை.

அதனால் அதே பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரிடம் டியூசன் படித்து வந்தான். கடந்த 16-ம் தேதி வீட்டை விட்டுச்சென்ற என்னுடைய மகன், வீட்டுக்கு திரும்ப வரவில்லை. எனவே அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

விசாரணை: இந்த புகாரின்பேரில் போலீஸாரும், மாயமான சிறுவனை தேடும் பணியில் இறங்கினார்கள்.. அப்போது இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டபோதுதான், டியூஷன் படிக்கும் ஆசிரியையின் தங்கை, இன்னொரு இளைஞருடன் சேர்ந்து சிறுவன் புதுச்சேரிக்கு டூர் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீஸார் சொல்லும்போது, “டியூஷன் ஆசிரியையின் தங்கை, சிறுவனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.. இந்த விஷயம் தெரிந்த சிறுவனின் குடும்பத்தினர்,

அசோக் நகர் மகளிர் போலீஸில், டியூஷன் ஆசிரியையின் தங்கை மீது புகார் தந்திருக்கிறார்கள்.

உடனே போலீசாரும் பெற்றோர் தந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

சமாதானம்: அப்போது, சிறுவன் குடும்பத்தினரும், டியூசன் ஆசிரியையின் குடும்பத்தினரும் சமாதானமாக செல்வதாக எழுதி தந்துவிட்டு போயிருக்கிறார்கள்..

இதன்காரணமாக டியூஷன் ஆசிரியையின் தங்கை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் இந்த சம்பவம் நடந்து 15 நாட்களுக்குள் சிறுவனை காணவில்லை என்று எங்களுக்கு புகார் வந்தது. இதுகுறித்து நாங்கள் விசாரித்தபோது, டியூஷன் ஆசிரியையின் தங்கையும் அன்றைய தினம் வீட்டில் இல்லை என்பது எங்களுக்கு தெரியவந்தது.

அதனால் அவரையும் தேடிவந்தோம். அப்போதுதான், டியூஷன் ஆசிரியையின் தங்கை, சிறுவன், ராகுல் என்ற இளைஞர் ஆகிய 3 பேரும் புதுச்சேரிக்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது.

 டியூஷன் டீச்சர்: இதற்கு நடுவில் டூர் முடித்துக்கொண்டு 3 பேரும் சென்னைக்கு திரும்பினார்கள்.. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது சிறுவனும்,

டியூசன் ஆசிரியரின் தங்கையும், “வீட்டுக்குத் தெரியாமல் டூருக்கு போனோம்’ என்று சொன்னார்கள்.. இதனால், சிறுவன், டியூசன் ஆசிரியையின் தங்கை இருவரின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம்..

இளைஞர் ராகுலிடம் விசாரணை நடந்து வருகிறது” என்றனர். அதாவது, 10ம் வகுப்பில் ஃபெயில் ஆன 15 வயது சிறுவனும், டியூஷன் டீச்சரின் தங்கையை காதலித்து வந்தாராம்.

இந்த பெண்ணுக்கு 23 வயதாகிறது.. சிறுவன் மாயமானது குறித்து பெற்றோர் புகார் தந்ததுமே எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தியதில், இவர்கள் புதுச்சேரிக்கு சென்றதாக தகவல் கிடைத்திருக்கிறது.

தனிப்படை: இதனால் புதுச்சேரிக்கே தனிப்படை போலீசார் கிளம்பி சென்று, அங்கிருந்த 3 பேரையுமே சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அப்போதுதான் சிறுவனும், 23 வயது பெண்ணும் காதலித்து வந்ததும், இருவரும் சேர்ந்து வாழ நண்பன் ராகுல் உதவியுடன் புதுச்சேரி சென்றதும் தெரியவந்திருக்கிறது.

இப்போதைக்கு இருவரின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை போலீசார் அனுப்பி வைத்துள்ள நிலையில், இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லையாம்.

ராகுல் என்ற 19 வயது இளைஞரை போலீசார் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது..

அந்தவகையில், இளம்பெண் மற்றும் ராகுல் இருவரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்..

இவர்கள் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், சிறுவனும் இளம்பெண்ணும் காதலித்து வந்ததும், அதற்கு ராகுல் உதவியதும் தெரியவந்ததையடுத்து, இந்த கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply