காபூல்: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலுக்கு நடுவே தான் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பிஎல்எஃப் Baloch Liberation Front (BLF)
அமைப்பு வெளியிட்டுள்ள போஸ்டர் பாகிஸ்தான் பிரதமர் ேஷபாஸ் ெஷரீப் மற்றும் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளிட்டவற்றை அலற வைத்துள்ளது.

அப்படி என்ன நடந்தது? இந்த பிஎல்எஃப் அமைப்பு என்பது என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே தற்போது கடும் மோதல் நடந்து வருகிறது. இருநாடுகள் இடையேயான எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பினருக்கும் இடைமே மோதல் நடந்து வருகிறது.

கடந்த ஒருவாரமாக மோதல் தொடர்ந்து வருகிறது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த டிடிபி அமைப்பினர் எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து அந்த நாட்டு ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதோடு சில ராணுவ நிலைகளை டிடிபி அமைப்பினர் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இப்படி டிடிபி அமைப்பை சமாளிக்க முடியாமல் தவிக்கும் சூழலில் தான் பாகிஸ்தான் தற்போது ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் இன்னொரு அமைப்பான பிஎல்எஃப்-பை பார்த்து அச்சமடைந்துள்ளது.

Pakistan PM Shahbaz-Sharif

இதற்கு அந்த அமைப்பு வெளியிட்ட போஸ்டர் தான் காரணம். இந்த போஸ்டர் தான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவம், மற்றும் அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளிட்டவற்றை அலற வைத்துள்ளது.

இதற்கு காரணம் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள நவீன ஆயுதங்கள் தான். இந்த ஆயுதங்கள் என்பது சாதாரணமானது இல்லை.

அதாவது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் ஆயுதங்களை விட பிஎல்எஃப் அமைப்பினர் நவீன ஆயுதங்களை வைத்துள்ளனர்.

அதன்படி M16A4 ரைபிள், M240B மெஷின் கன், RPG-7 லாஞ்சர், பல்கேரியன் OGi-7MA ப்ரோஜெக்ட்டல்ஸ், பிகேஎம் மெஷின் கன் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இருந்தன.

அந்த ஆயுதங்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்பம் கொண்டவையாக உள்ளன. Powered By Logo இதன்மூலம் தாக்குதல் நடத்தப்படும்போது அதனை சமாளிப்பது பாகிஸ்தானுக்கு சிரமமான காரியமாக இருக்கும்.

இதுதான் தற்போது பாகிஸ்தானுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. அதாவது இந்த ஆயுதங்கள் எப்படி பிஎல்எஃப் அமைப்பினருக்கு கிடைத்தது? என்ற விபரம் தெரியாமல் பாகிஸ்தான் உளவுத்துறை திணறி வருகிறது.

அதேபோல் இந்த ஆயுதங்ககளை வைத்து தாக்குதல் நடத்தினால் எப்படி சமாளிப்பது என்று பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்த நாட்டின் பிரதமர்ஷெபாஸ் ஷெரீப் கலங்கி உள்ளார்.

ஏனென்றால் அவர்கள் வைத்துள்ள M16A4 ரைபிள் என்பது அமெரிக்காவின் தயாரிப்பாகும். இது அமெரிக்காவின் மரைன் கார்ப்ஸில் 2003ம் ஆண்டில் இருந்து.

பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது 3.3 கிலோ எடையுடன் 100 செமீ நீளம் கொண்டதாக இருக்கும். இந்த துப்பாக்கியில் 20-30 Round Magazine இருக்கும்.

அதோடு ஒரு நிமிடத்துக்கு 700 முதல் 950 ரவுண்ட்டுகள் வரை சுடும் திறன் கொண்டது. இதில் .223 கலிபர் தோட்டாக்களை பயன்படுத்த முடியும் என்பதால் இது மிகவும் ஆபத்தான ரைபிளாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் M240B மெஷின்கன் என்பதும் அமெரிக்காவின் தயாரிப்பாகும். M240B மெஷின் கன்னுக்கு இன்னொரு பெயரும் உள்ளது. அது என்னவென்றால் M240 Bravo என்பதாகும்.

இதுதவிர 240 என்றும் சொல்வார்கள். இது கேஸில் இயங்கும். அதோடு 7.62 மில்லிமீட்டர் தோட்டாவை பயன்படுத்தி சுடும் தன்மை கொண்டது.

12.5 கிலோ எடையுள்ள இந்த மெஷின் கன் மூலம் நிமிடத்துக்கு 500-950 ரவுண்ட்டுகள் வரை2 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள எதிரிகளை சுட்டு வீழ்த்த முடியும்.

அதோடு ராணுவ வாகன்ஙகள், விமானங்கள், கப்பல்கள் உள்ளிட்டவற்றிலும் இந்த மெஷின்கன்னை பொருத்தி எதிரிகளை தாக்க முடியும். RPG-7 லாஞ்சர் என்பது என்பது ரஷ்யா தயாரிப்பாகும்.

இது கையால் கையாளக்கூடிய anti-tank grenade launcher ஆகும். இதனை ரஷ்யா 1961ம் ஆண்டில் பயன்படுத்தியது. தற்போது பழங்கால ஆயுதமாக இருக்கிறது.

ஆனாலும் எதிரிகளுக்கு இந்த ஆர்பிஜி – 7 லாஞ்சர் என்பது மரணத்தை நிச்சயம் பரிசளிக்கும் என்பதால் தற்போது பல்வேறு நாட்டு படைகளும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் பிஎல்எஃப் அமைப்பிடமும் இது உள்ளது. மேலும் பல்கேரியா நாட்டின் பல்கேரியன் ஓஜிஐ – 7 எம்ஏ புரோஜெக்டைல்ஸ், ரஷ்யாவின் பிகேஎம் மெஷின் கன் உள்ளிட்டவையும் உள்ளது.

இதில் பிகேஎம் மெஷின் கன் என்பது எடை குறைவாகவும் துல்லியமாக இலக்கை குறிவைத்து தாக்கவும் முடியும். அதேபோல் வாகனங்களிலும் இதனை வைத்து தாக்க முடியும்.

இதனால் தான் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போய் உள்ளது. தற்போது வரை இவர்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது பற்றி எதையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இருப்பினும் அவர்கள் தங்களின் ஆயுதத்தை வெளியிட்டு இருப்பது என்பது பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்குவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஏனென்றால் இந்த பிஎல்எஃப் அமைப்புக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 50 ஆண்டை கடந்த பகை என்பது உள்ளது.

இந்த பிஎல்எஃப் அமைப்பை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பாகவே அறிவித்தள்ளது. அதாவது பிஎல்எஃப் என்பதன் விரிவாக்கம் என்னவென்றால் பலுச் விடுதலை முன்னணி. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் Baloch Liberation Front அல்லது BLF.இந்த அமைப்பை உருவாக்கியவர் ஜும்மா கான் மாரி.

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கடந்த 1964ம் ஆண்டில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம் என்பது பலுசிஸ்தான் பகுதியை ஒன்றாக்கி தனி நாடாக அமைக்க வேண்டும் என்பதாகும்.

ஒரு காலத்தில் பலுசிஸ்தான் என்பது ஒரே பகுதியாக இருந்தது. ஆனால் ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நாடுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டபோது பலுசிஸ்தான் பல பகுதிகளாக மாறியது.

பலுசிஸ்தான் மக்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டனர். ஒரு பகுதியினர் பாகிஸ்தான், இன்னொரு பகுதியினர் ஈரான், பெரும்பாலான மக்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.

பாகிஸ்தானை எடுத்து கொண்டால் பலுசிஸ்தான் என்று தனி மாகாணமே உள்ளது. ஈரானில் சிஸ்தான் மாகாணம் என்பது பலுசிஸ்தான் பகுதியை குறிக்கும் வகையில் உள்ளது.

ஆப்கானிஸ்தானை எடுத்து கொண்டு கொண்டால் இப்போதைய தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளான நிம்ரூஸ், ஹெல்மண்ட் மற்றும் கந்தகார் உள்ளிட்ட மகாணங்கள் பலுசிஸ்தான் பிராந்தியமாக கருதப்படுகிறது.

இதையடுத்து தான் பிஎல்எஃஎப் அமைப்பு ஒருங்கிணைந்த பலுசிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கியது.

ஆப்கானிஸ்தானில் தான் அதிகமாக பலுசிஸ்தான் பிராந்திய மக்கள் உள்ளனர். இதனால் ஈரான் மற்றும் பாகிஸ்தானை அந்த அமைப்பு டார்க்கெட் செய்தது.

ஈரானில் பிஎல்எஃஎப் அமைப்பு கடந்த 1968 -73 காலக்கட்டத்தில் போரிட்டது. அங்கு அந்த அமைப்பு வீழ்த்தப்பட்டது.

பாகிஸ்தானில் 1973-78 காலக்கட்டத்தில் இந்த அமைப்பு அழிக்கப்பட்டது. அடுத்தடுத்து விழுந்த அடியால் பிஎல்எஃஎப் அமைப்பின் தலைவர் ஜும்மா கான் மாரி ஆப்கானிஸ்தான் சென்றார்.

அதன்பிறகு இந்த அமைப்பு செயல்படாமல் இருந்தது. அதன்பிறகு 2004ல் மீண்டும் இந்த பிஎல்எஃஎப் அமைப்பு அல்லா நசர் பலுச் என்பவர் தலைமையில் வலுப்பெற தொடங்கியது.

பாகிஸ்தானை நோக்கி தாக்குதல்களை நடத்த தொடங்கியது. இதில் பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் பாகிஸ்தானில் சீனா முதலீடுகளை இந்த அமைப்பு என்பது கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் தான் தற்போது ஆப்கானிஸ்தானின் டிடிபி மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையேயான மோதலில் பிஎல்எஃப் அமைப்பு களம் காண அதிக வாய்ப்புள்ளது என்பது பாகிஸ்தான் பீதியாகி உள்ளது. Its game time – play now! More From

Baloch Liberation Front (BLF)

 

Share.
Leave A Reply