“ஜிம்பாப்வே நாட்டின் வடக்குப் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன், சிங்கங்கள், யானைகள் மற்றும் பிற ஆபத்தான வனவிலங்குகளின் இருப்பிடமான மட்டுசடோனா தேசிய பூங்காவின் ஆபத்தான வனப்பகுதியில் ஐந்து நாட்கள் உயிர் பிழைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
டினோடெண்டா பூண்டு [Tinotenda Pundu] என்று அந்த சிறுவன் டிசம்பர் 27 அன்று வடக்கு ஜிம்பாப்வேயில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே சுற்றித் திரிந்துகொண்டிருந்தபோது சிறுவன் தொலைந்து போனான் 5 நாட்களுக்கு பிறகு சுமார் 30 மைல்கள் (50 கிமீ) தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டான்.
நீரிழப்பினால் பலவீனமான நிலையில் சிறுவன் மீட்கப்பட்டான். வறட்சியின்போது தனது கிராமத்தில் கற்றுக்கொடுத்த யுக்திகளை பயன்படுத்தி சிறுவன் உயிர்பிழைத்துள்ளான்.
💫 A boy missing & found in Matusadonha game park
A true miracle in remote Kasvisva community, Nyaminyami in rural Kariba, a community where one wrong turn could easily lead into a game park. 8-year-old Tinotenda Pudu wandered away, lost direction & unknowingly headed into the… pic.twitter.com/z19BLffTZW
— Mutsa Murombedzi MP🇿🇼 (@mutsamu) January 1, 2025
சிறுவன் ஒரு ஆற்றங்கரையில் குச்சிகளைப் பயன்படுத்தி தண்ணீரைத் தோண்டி, ட்ஸ்வான்ஸ்வா என்ற காட்டுப் பழத்தை உண்டு வாழ்ந்துள்ளான்.
சிறுவனின் கதையை விவரித்த உள்ளூர் எம்.பி. முட்சா முரோம்பெட்ஸி, சிறுவன் அலைந்து திரிந்து , திசை தவறி, ஆபத்தான மட்டுசடோன்ஹா பூங்காவிற்குத் தெரியாமல் சென்றுள்ளான்.
ஹாக்வேக்கு அருகிலுள்ள காட்டில் 5 நீண்ட, கொடூரமான நாட்களுக்குப் பிறகு. உமே நதியின் துணை நதி அருகே சிறுவனை ரேஞ்சர்கள் உயிருடன் கண்டுபிடித்தனர்.
வீட்டிலிருந்து 23 கிமீ தூரம் அலைந்து திரிந்து, கர்ஜனை செய்யும் சிங்கங்கள், யானைகளைக் கடந்து செல்வது, காட்டுப் பழங்களை உண்பது மற்றும் ஆபத்தான காட்டுப் பகுதிகளுக்கு மத்தியில் உறங்குவது, 8 வயது சிறுவனுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்று விவரித்தார்.
மட்டுசடோனா பூங்காவில் சுமார் 40 சிங்கங்கள் உள்ளன. துணிச்சலான பூங்கா ரேஞ்சர்களுக்கும், நியாமினியாமி சமூகத்தை சேர்ந்தவர்களும், ஒவ்வொரு நாளும் சிறுவன் கேட்கும்படி டிரம்ஸ் அடித்து தேடி கடைசியில் கண்டுபிடிக்க உதவியுள்ளார்கள் என்று நன்றி தெரிவித்த எம்.பி., டினோடெண்டாவைக் கவனித்து, அவரைப் பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்கு ரேஞ்சர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தார்.