கடந்த வருடம் நவம்பர் மாதம் காணாமல் போன 16 வயது சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை அடம்பிட்டிய பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் தனது மகள் ரத்நாயக்க முதியன்சலாகே கவிஷா தேவ்மிணி காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தாயாரின் முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்ணளவாக 5 அடி 2 அங்குல உயரம் கொண்ட வெண்ணிறமான கவிஷா, கடைசியாக வெளிர் பச்சை நிற ஆடை அணிந்திருந்தார், மேலும் அவரது இடது கையில் முழங்கைக்கு அருகில் சிறிய வெட்டு காயம் ஒன்றும் உள்ளது.
காணாமல் போன சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தகவல் தெரிந்தவர்கள் அடம்பிட்டிய OIC யை 071-8591528 அல்லது அடம்பிட்டிய பொலிஸ் நிலையத்தை 055-2295466 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.