கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் வீதியில் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது செவ்வாய்க்கிழமை (07) பகல் 9:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது முகமாலை வடக்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த வீதியினால் பயணித்தபோது வீதியில் தேங்கி காணப்பட்ட வெள்ள நீரில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பளைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முகமாலை வடக்கு பளையினை சேர்ந்த மாணிக்கம் உதயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply