பெண்களுக்கு துன்பம் விரைவுத்தலை தடை செய்யும் சட்டதிருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் தற்போது தாக்கல் செய்துள்ளார்.

பெண்களுக்கு துன்பம் விளைவிக்கப்படுவதை தடுக்க வகை செய்யும் சட்டதிருத்த மசோதா தற்போது பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஈடுபடும் நபர்களுக்கு ஜாமினில் வெளிவராத வகையில் சட்டங்களை கடுமையாக்குவது தொடர்பாக, ‘2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலைத் தடை செய்கின்ற திருத்தச்சட்டம்’ சட்ட திருத்த மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது மன்னிக்கமுடியாத குற்றம் என்றும், இந்தவகையில், bns சட்டத்தின் கீழும் மாநில அரசின் சட்டத்தின் கீழும் ஏற்கெனவே சட்டங்கள் இருந்தாலும், மேலும் இதனை கடுமையாக்கும் வகையில், இம்மசோதாவில், வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

சட்ட மசோதா விவரம்

-கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்படுபவர்கள், வாழ்நாள் சிறை தண்டனை.

-மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை பிணையில் விடுவிக்க கூடாது.

-பெண்ணின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் குற்ற செயல் மூன்று ஆண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை.

-பெண்கள் மீது ஆசிட் வீசு சம்பவம் ஏற்பட்டால், குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுட்காலம் பிணையில் விடுவிக்கக்கூடாது.

Share.
Leave A Reply