மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகில் உள்ள குழியில் பெண்ணின் சடலம் ஒன்று வியாழக்கிழமை (09) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர். இருப்பினும், அவரது சடலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலாடை மற்றும் லெக்கின்ஸ் ஆகிய ஆடைகளை குறித்த பெண் அணிந்துள்ளார். அத்துடன் பெண்ணின் அருகில் இருந்த பையில் இருந்து கொழும்பில் இருந்து மதவாச்சிக்கு இ.போ.சபை பேருந்தில் பயணித்த சிட்டை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பெண்ணின் உடலில் பல காயங்கள் காணப்பட்டுள்ள நிலையில், இதுவொரு கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நீதவானின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுராதபுர ​வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply