யாழ்ப்பாணத்தில், வாளுடன் சமூக வலைத்தளத்தில் காணொளிகளை வெளியிட்ட சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சுழிபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவன், வாளுடன் பல்வேறு கோணங்களில் காணொளிகளை எடுத்து, அவற்றை ரிக் ரொக் தளத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.
இது தொடர்பில் வட்டுக்கோட்டை காவற்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , குறித்த சிறுவனை காவற்துறையினர் கைது செய்ததுடன், சிறுவனிடம் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.