அநுராதபுரம்,நொச்சியாகம, காலதிவுல்வெவ பிரதேசத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காலதிவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நொச்சியாகம காலதிவுல்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய இரு பாடசாலை மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவர்களதும் சடலங்கள் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலதிவுல்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply