யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (18) வல்வெட்டித்துறை பொலிஸார் இந்த நபரை கைது செய்து, பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைத்திருந்தனர்.

அந்நிலையில் திடீர் சுகவீனம் ஏற்பட்டதாக கூறி அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வைத்திய சாலைக்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.

அதனையடுத்து, யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகள் நடைபெற்று, சடலத்தின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply