“அமெரிக்காவில் விமானப்படை ஜெட் விமானம் ஒன்று பயிற்சியின்போது கீழே விழுந்து விபத்துக்களாகியுள்ளது.
நேற்று (ஜனவரி 28) மதியம் அலாஸ்காவின் ஃபேர்பேங்க்ஸ் அருகே அமைந்துள்ள எய்ல்சன் விமானப்படைத் தளத்தில் F-35 Lightning II போர் விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
A U.S. Air Force #F35 fighter jet #crashed at #Eielson AFB, Alaska. The accident occurred during landing. The pilot is safe and was taken to Bassett Hospital. An investigation is underway.
The crash video starts with the A/C inverted, indicating very low airspeed at ejection. pic.twitter.com/0BDdPvXe7I— Eli Zusman (@muki46) January 29, 2025
பயிற்சியின் போது தரையிறங்கும் சமயத்தில் விபத்து நேர்ந்ததாக எய்ல்சன் விமானப்படை அறிக்கை கூறுகிறது.இதனால் விமானம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது.
விமானி பாதுகாப்பாக இருப்பதாகவும், பாசெட் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.F-35 ஒரே நேரத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது. “,