இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

வியாழக்கிழமை (30) காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு மத தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இன்று பிற்பகல்  அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது.

1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் புதன்கிழமை (29) இரவு  உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Share.
Leave A Reply