வடக்கு மாகாணத்தின் வீதிகளை திருத்துவதற்கு எவ்வளவு நிதி தேவை என அரச அதிகாரிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கேட்க, அதற்கு பதில் கூற முடியாமல் அரச அதிகாரிகள் திக்கு முக்காடியுள்ளனர்.

இன்று (31) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது வடக்கு மாகாணத்தின் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் வீதிகளை புனரமைத்து, சீரமைக்க எவ்வளவு நிதி தேவை, எவ்வளவு நிதி கொடுத்தால் அனைத்து வீதிகளையும் புனரமைக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டில் எத்தனை வீதிகளை புனரமைக்க முடியும் என்றும் கேட்டுள்ளார்.

இதற்கு வீதி அபிவிருத்தி தொடர்பில் எந்த அதிகாரிகளும் முழுமையான பதில் வழங்கவில்லை.

“அது என்னுடைய திணைக்களம் அல்ல”, “அது மாகாணத்துக்குரியது” என்பது போல் மாறிமாறி பதில்களை வழங்கியுள்ளனர்.

Share.
Leave A Reply