அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற 40 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற தேசிய இறுதிப் போட்டியில் திருமதி அழகு ராணியாக முடிசூட்டப்பட்ட அமந்தா, திருமதி உலக அழகி போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற தேசிய இறுதிப் போட்டியில் இலங்கையின் திருமதி அழகு ராணியாக முடிசூட்டப்பட்ட அமந்தா, திருமதி உலக அழகி போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மற்றும் நியூசிலாந்து என இரட்டை குடியுரிமை பெற்ற நிஷி ரணதுங்காவுடன் போட்டியிட்ட இரண்டு இலங்கையர்களில் இவரும் ஒருவர்.
இவர் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இருவரில் ஒருவராவார். மற்றொருவர் நியூசிலாந்தை பிரதிநிதித்துவம்படுத்திய நிஷி ரணதுங்க ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் திருமதி பிரபஞ்ச அழகி மற்றும் அதே ஆண்டு திருமதி உலகி அழகி போட்டியில் மூன்றாடம் இடத்தையும் பிடித்துள்ளார்.