இலங்கையர்கள் நாளொன்றுக்கு 69 கோடி ரூபாவை ரூபாவை மதுபாளத்திற்க்காக செல வழிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் கவல் மையம்(ADIC) தெரிவித்துள்ளது.

அதேவேளை மதுபான பாவனையால் நாளொன்றுக்கு 40 – 50 பேர் வரை உயிரிழப் பதாகவும் இந்த தொகை வருடத்திற்கு 15,000 – 20,000 என வும் கூறப்படுகின்றது.

இதனால், இலங்கையில் பல குழந்தைகள் தந்தையை இழந்து வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஒன்று கூடும் இடங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபா வனை அதிகரித்திருப்பதால் சமூகக் குடிப்ப முக்கம் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இலங்கையர்கள் நாளொன்றுக்கு 510 மில்லியன் ரூபாவை மதுபாவனைக்காக செலவழித்து வந்ததா கவும் இந்த தொகை தற்போது அதிகரித்திருப் பதாகவும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் நிர்வாக இயக்குநர், சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.

இன்னொரு ஆய்வில், மதுபாளத்தினால் இலங்கைக்கு 166.2 பில்லியன் வருமாளம் கிடைத்துள்ளபோதிலும் மதுப்பழக்கத்தால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதாரபிரச் சினைகளை தீர்ப்பதற்காக ஆண்டொன்றுக்கு 214 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவழிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply