சேலம்: காதலனுடன் லிவிங் டுகெதர்… ரவுடியுடன் கல்யாண வாழ்க்கை… தந்தை, மகனுடனும் உல்லாசம் என கள்ளக்காதலியின் அடங்காத ஆசையால் ஒரு உயிர் பறிபோய் உள்ளது.
சினிமாவை மிஞ்சம் வகையில் நடந்து உள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் வீராணம் அருகிலுள்ள வீமனூர் காட்டுவளவை என்ற பகுதியில் வசித்து வருபவர் குமரவேல்..
29 வயதாகும் குமரவேல் டிரைவராக உள்ளார்.. 2 நாட்களுக்கு முன்பு, இவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்..
இதையடுத்து வீராணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, பிரபல ரவுடி பிரகாஷ், அவரது கூட்டாளிகள் மாணிக்கம், கனகராஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
அப்போதுதான், இந்த கொடூர கொலைக்கு காரணம் கள்ளக்காதல் என்பது தெரியவந்தது. பிரபல ரவுடி பிரகாஷ் என்பருக்கு உதவியாக, அவரது நண்பர்கள் இந்த கொலையில் சம்பந்தப்பட்டதும் தெரியவந்தது..
இதையடுத்து, பிரகாஷ், போலீசாரிடம் வாக்குமூலமும் தந்துள்ளார். அதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்வதாவது:
42 வயது வசந்தி: தாதகாபட்டியை சேர்ந்தவர் ரமேஷ்.. இவரது மனைவி வசந்திக்கு 42 வயதாகிறது.. இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
ஆனால், வசந்தியின் தவறான நடத்தை காரணமாக, ரமேஷ் அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
வசந்தி ஏலச்சீட்டு நடந்தி, அதன்மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
அப்போது பல ஆண்களுடன், தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது.. அதில் ஒருவர்தான் மோகன்.. இவரது மகன்தான் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட குமரவேல்.
இந்த குமரவேலுவுடனும் வசந்திக்கு தொடர்பு ஏற்பட்டது. குமரவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார்.
எனினும், தந்தை, மகன் என இருவருடனுமே வசந்தி நெருங்கி பழகினார்.. ஒருகட்டத்தில் குமரவேலுவையே திருமணம் செய்து கொண்டார்.
அத்துடன், தன்னுடன் இருக்க வேண்டுமானால், மனைவியை உதறித்தள்ளிவிட்டு வா என்று குமரவேலுவிடம் நச்சரிக்க தொடங்கினார்.
அள்ளி இறைத்த பணம்: இதனால், மனைவியை, ஒரே மாதத்தில் வீட்டை விட்டு துரத்திவிட்டு, 29 வயதான குமரவேல், 42 வயதான வசந்தியுடன் ஒன்றாக வாழ துவங்கினார்.
அத்துடன், குமரவேலுவுக்கு தாராளமாக பணத்தை அள்ளி இறைத்தார்..
ஆனால், வசந்திக்கு திடீரென பிரபல ரவுடி பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பிரகாஷூக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள்..
எனினும், வசந்தியை விட்டு பிரிய மனமில்லாமல் தவித்தார்.. ஒருகட்டத்தில் பிரகாஷை வசந்தி, 3வதாக திருமணமும் செய்து கொண்டார்.
அத்துடன், குமரவேலுவின் செல்போன் நம்பரையும் பிளாக் செய்துவிட்டார். இதைப்பார்த்து குமரவேல் அதிர்ந்து போனார்..
வசந்தியை நம்பி, கட்டிய மனைவியை விரட்டி விட்டேனே? என்று மனம்வேதனைப்பட்டார்.. இதனால் உச்சக்கட்ட கோபம் அடைந்த குமரவேல், வசந்தியுடன் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த போட்டோ, வீடியோவை செல்போனில் DP யாக வைத்தார்..
இதனை பார்த்து வசந்தியும், பிரகாஷூம் அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த DPயை உடனடியாக நீக்கும்படி, இருவரும் சேர்ந்து குமரவேலை மிரட்டினார்கள்.
“உன்னால்தானே என் வாழ்க்கையே நாசமா போச்சு, நடுரோட்டில் நிற்கிறேன், DP எடுக்க முடியாது, அந்தரங்க வீடியோவையும் விரைவில் வெளியிடுவேன்” என்று சொல்லியிருக்கிறார்.
இதன்பிறகுதான், குமரவேலுவை தீர்த்துக்கட்டும்படி, பிரகாஷிடம் வசந்தி சொன்னாராம். அதன்படியே, பிரகாஷ் மற்றும் நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து, குமரவேலுவின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர்.
செல்போன்: குமரவேலு சடலமாக விழுந்ததுமே, அவரிடமிருந்த செல்போனை எடுத்து, அருகிலிருந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டார்களாம்.
இவ்வளவும் வாக்குமூலமாக பிரகாஷ் சொன்னதையடுத்து, பிரகாஷ், வசந்தி, மாணிக்கம், கனகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இப்போது கிணற்றில் போடப்பட்ட செல்போனை மீட்கும் நடவடிக்கையிலும் இறங்கியிருக்கிறார்கள்… 42 வயது வசந்தியால், இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியவில்லை..!!