உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடரும் அதேவேளை தேசிய புலனாய்வு பிரிவிற்காக பணியாற்றிய முன்னாள் உயரதிகாரிகள் சிலருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவரது செயலாளர்களில் ஒருவரான ஆசாத்மௌலானவுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ள இந்த அதிகாரிகள்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டiயை அனுபவித்தவேளை பிள்ளையான் சிறையிலிருந்தவாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என ஆசாத்மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சிக்கும் தெரிவித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆசாத்மௌலானா

ஆசாத்மௌலானா தெரிவித்துள்ள விடயங்கள் சிஐடி அதிகாரி ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ள விடயங்களுடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.

2024 ஜூன் 13ம் திகதி டெய்லிமிரருக்கு வழங்கிய விசேட பேட்டியில் தேசிய புலனாய்வு சேவையும் இராணுவபுலனாய்வு பிரிவினரும் சிஐடியினரை தவறாக வழிநடத்தியிருக்காவிட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக உள்ள செனிவிரட்ண தெரிவித்திருந்தார்.

தேசிய புலனாய்வு பிரிவினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் சிஐடியினரை தவறாக வழிநடத்தாமல் சரியான தகவல்களை வழங்கியிருந்தால் நானும் எனது சிரேஸ்ட அதிகாரிகளும் தாக்குதலை தவிர்த்திருப்போம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

2018 நவம்பர் 30 திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸ்கான்ஸ்டபிள்கள் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் சிஐடியினரை தவறாக வழிநடத்தியிருந்தனர் என தெரிவித்திருந்தார்.

இதுவே ஜஹ்ரானின் நடவடிக்கைகளின் திருப்புமுனையாக அமைந்ததுடன்,ஐந்து மாதங்களின் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்தது.

இந்த கொலைகளிற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களே காரணம் என புலனாய்வு பிரிவினர் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டினார்கள்,இதன் மூலம் சிஐடியினர் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் செயற்பட்ட முஸ்லீம் அமைப்பின் மீது தமது கவனத்தை திருப்புவதை தடுத்தார்கள் என செனிவிரட்ண தெரிவித்திருந்தார்.

2018 டிசம்பர் 5, 8 . 14ம் திகதிகளிலும், 2019 ஜனவரி 3ம் திகதியும் புலனாய்வு அமைப்புகள் பொய் அறிக்கைகளை சிஐடிக்கு அனுப்பியுள்ளன என ரவி செனிவிரட்ண தெரிவித்திருந்தார்.

உயிரிழந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை 2018 நவம்பர் 26ம் திகதி நினைவுகூரூவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமையினாலேயே முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள்இந்த கொலைகளை செய்தனர் என அந்த அறிக்கைகள் தெரிவித்தன.

பல தடவை பிள்ளையானை விசாரணை செய்துள்ளதாக தெரிவித்துள்ள சிஐடியினர் இந்த சதி முயற்சியில் தொடர்புபட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கம் கொலை தொடர்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக ஜஹ்ரான் குழுவினரின் உதவியை பெறுவதற்கு பிள்ளையான் உதவினார் என பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பிரிட்டனை தளமாக கொண்ட சனல்4 2023 செப்டம்பரில் சர்ச்சைக்குரிய ஆவணப்படமொன்றை வெளியிட்டது.இந்த ஆவணப்படத்தில் பிள்ளையான் மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய முக்கிய பாதுகாப்பு அதிகாரியொருவர் ஜஹ்ரானையும் அவரது குழுவினரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை பிள்ளையான் செய்தார் என ஆசாத் மௌலானா தெரிவித்திருந்தார்.

2018 ஜனவரிமாதம் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வனாத்தவில்லுவில் உள்ள லக்டோவத்தை என்ற தென்னந்தோட்டத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது என ஆசாத் மௌலானா தெரிவித்திருந்தார்.

2022 டிசம்பர் 30 ம் திகதி ஜெனீவாவில் ஆசாத் மௌலானா வழங்கிய அறிக்கையின் பிரதி எங்களிடம் உள்ளது ( டெய்லிமிரர்)சனல் 4வெளியிட்ட ஆவணப்படமும் உள்ளது.

உள்ளக தகவல்களை வழங்கும் நபர் ஒருவர் தெரிவித்த விடயங்களை வைத்தே பின்வரும் விடயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

பிணை வழங்குதல்

2024ம் ஆண்டு நவம்பர் மாதம்24ம் திகதி மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் பிள்ளையானிற்கு எவ்வாறு பிணை வழங்கியது என்பது குறித்த விபரங்களை தெரிவித்த உயர் அதிகாரியொருவர், ராஜபக்ச சகோதரர்களில் மேலும் ஒருவரை இலங்கையின் ஜனாதிபதியாக்குவதற்காக பிள்ளையான் செய்த உதவிக்காக பிள்ளையானிற்கு பிணை கிடைப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் நீதித்துறையை சேர்ந்த மூவரிடம் பசி;ல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்தார் என தெரிவித்தார்.

2007 நவம்பர் 2ம் திகதி போலிகடவுச்சீட்டில் பிரித்தானியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அந்த நாட்டில்கைதுசெய்யப்பட்டார்.

இலங்கையின் தேசிய புலனாய்வு சேவையே இந்த கடவுச்சீட்டை வழங்கியிருந்தது.

கருணா அம்மானை அகற்றிவிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக பிள்ளையானை கொண்டுவருவதற்கு இலங்கையின் தேசிய புலனாய்வு அமைப்பு விரும்பியது.

கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக விளங்கிய சுரேஸ்சாலே பிள்ளையானிற்கு தெரிவித்தார் என இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கருணா அம்மானின் மெய்ப்பாதுகாவலர்களை பிள்ளையான் கொலை செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் மூலம் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பிள்ளையானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது அவர் அதன் தலைவரானார்.

2008 ஜனவரி 23ம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது.அதன் முதல் கூட்டம் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் பின்னர் 2008 இல் இடம்பெற்ற கிழக்குமாகாண சபை தேர்தலில் பிள்ளையான் வெற்றிபெற்றார்.அதனை தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரை முதலமைச்சராக்கினார்.

ஆசாத் மௌலானா அவரின் ஒருங்கிணைப்பு செயலாளராக மாறினார்.

2007 முதல் அதாவது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முதல் இராணுவபுலனாய்வு பிரிவினர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு மாதாந்தம் 3.5 மில்லியன் வழங்கி வந்ததாக ஆசாத் மௌலான தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் உத்தரவின் பேரில் மௌலானவே இந்த பணத்தை இராணுவபுலனாய்வு பிரிவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

2015 இல் மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கூலிப்படைக்கு பணம் வழங்கப்படுவது தொடர்ந்தது என பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

எனினும் புதிய அரசாங்கத்தின் கீழ் மாதாந்த கொடுப்பனவுகள் எதிர்காலத்தில் சாத்தியமில்லை என சுரேஸ்சாலே பிள்ளையானிற்கும் ஒரு முறை தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு பிரிவே இதுவரை காலமும் அவர்களிற்கு மாதாந்தம் பணம் வழங்கி வந்தது இதனால் எதிர்வரும் காலத்தில் கொடுப்பனவுகள் சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக புலனாய்வு பிரிவு கொடுப்பனவில் பதிவு செய்வதற்காக 15 பொய் பெயர்களை வழங்குமாறும் சாலே பிள்ளையானை கேட்டுள்ளார்.

பிள்ளையானின் உத்தரவுப்படி ஆசாத் மௌலானா 15 போலி பெயர்களை வழங்கினார் சாலே இராணுவபுலனாய்வு பிரிவினரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு பிள்ளையானிற்கு உத்தரவிட்டார் என அந்தஅதிகாரி தெரிவித்தார்.

தொடரும்

Share.
Leave A Reply